அயோத்தியில் அமைச்சரவை கூட்டம் - உத்தரப் பிரதேச வரலாற்றில் முதன்முறை!

அயோத்தியில் அமைச்சரவை கூட்டம் - உத்தரப் பிரதேச வரலாற்றில் முதன்முறை!

உத்தரப்பிரதேச அமைச்சரவையின் சிறப்பு கூட்டம் அயோத்தியில் இன்று நடந்தது. இதன் மூலம் மாநில வரலாற்றில் புதிய அத்தியாயம் துவங்கி உள்ளதாக முதல்வர் யோகி ஆதித்யநாதத் கூறியுள்ளார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட உச்ச நீதிமன்றம் 2019 நவம்பர் 9-ல் தீர்ப்பளித்தது. இதையடுத்து, 2020 ஆகஸ்ட் 5-ம் தேதி ராமர் கோயில் கட்டுவதற்காக பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ராமர் கோயில் பிரம்மாண்டமாகத் தயாராகி வருகிறது. கோயிலின் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22-ம் தேதி நடக்கிறது.

இந்நிலையில், அயோத்திக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அயோத்தியில் உள்ள ராமகாதை அருங்காட்சியகத்தில் உ.பி. அமைச்சரவையின் கூட்டம் நடத்தப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி, அயோத்தியில் இன்று மாநில அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

பின்னர், யோகி ஆதித்யநாத் கூறுகையில், ‘‘லக்னோவுக்கு வெளியே மாநில அமைச்சரவைக் கூட்டம் நடப்பது இதுவே முதல்முறை. உ.பி. மாநில வரலாற்றில் புதிய அத்தியாயம் தொடங்கி உள்ளது. மாநில வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in