உத்தரபிரதேசம், பிஹார் உள்ளிட்ட 5 மாநிலங்களின் இடைத்தேர்தல்: கட்சிகளின் முன்னிலை நிலவரம்?

உத்தரபிரதேசம், பிஹார் உள்ளிட்ட 5 மாநிலங்களின் இடைத்தேர்தல்: கட்சிகளின் முன்னிலை நிலவரம்?

உத்தரபிரதேசம், பிஹார் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் கட்சிகளின் முன்னிலை நிலவரம்.

குஜராத் மற்றும் இமாசல பிரதேச மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் உத்தர பிரதேசம், பிஹார், சத்தீஸ்கர், ஒடிசா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இருக்கும் 6 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் ஒரு மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.

பிஹாரின் குர்ஹானி தொகுதியில் ஐக்கிய ஜனதா தளத்தை பின்னுக்குத் தள்ளி பாஜக முன்னிலையில் உள்ளது. சத்தீஸ்கரின் பனுப்ரதாபூரில் பாஜகவை பின்னுக்குத் தள்ளி காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. ஒடிசாவின் பதம்பூர் தொகுதியில் பாஜகவை பின்னுக்குத் தள்ளி பிஜூ ஜனதா தளம் முன்னிலை வகிக்கிறது. ராஜஸ்தானின் சர்தார்சாஹர் தொகுதியில் பாஜகவை பின்னுக்குத் தள்ளி காங்கிரஸ் முன்னணியில் உள்ளது.

உத்தரபிரதேசத்தில் கட்டோலி தொகுதியில் பாஜகவை பின்னுக்குத் தள்ளி ராஷ்ட்ரிய லோக் தளம் முன்னிலையில் உள்ளது. ராம்பூர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சியை முந்தி பாஜக முன்னிலை வகிக்கிறது. மெயின்புரி மக்களவை தொகுதியில் பாஜகவை பின்னுக்குத் தள்ளி சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளரும், அகிலேஷ் யாதவின் மனைவியுமான டிம்பிள் யாதவ் முன்னிலையில் உள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in