6 மாநிலங்களின் 7 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கையின் முன்னணி நிலவரம்!

6 மாநிலங்களின் 7 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கையின் முன்னணி நிலவரம்!

தெலங்கானா, மகாராஷ்டிரா உட்பட 6 மாநிலங்களின் 7 சட்டசபை தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தெலங்கானாவின் முனுகோடு, மகாராஷ்டிராவின் அந்தேரி கிழக்கு, பிஹாரின் மோகாமா மற்றும் கோபால்கஞ்ச் தொகுதிகள், ஹரியானாவின் அதம்பூர், ஒடிசாவிலுள்ள தாம் நகர், உத்தரபிரதேசத்தின் கோலாகோகர்நாத் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 3ம் தேதி நடைபெற்றது.

இந்த சட்டசபை தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை இன்று காலையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தெலங்கானாவின் முனுகோடு தொகுதியில் ஆளும் டிஆர்எஸ் கட்சியும், மகாராஷ்டிராவின் அந்தேரி கிழக்கு தொகுதியில் உத்தவ் தாக்கரே பிரிவின் சிவசேனாவும், பிஹாரின் மோகாமா மற்றும் கோபால்கஞ்ச் ஆகிய தொகுதிகளில் ஆர்ஜேடி கட்சியும் முன்னிலையில் உள்ளது. ஹரியானாவின் அதம்பூர், ஒடிசாவிலுள்ள தாம் நகர் மற்றும் உத்தரபிரதேசத்தின் கோலாகோகர்நாத் ஆகிய தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in