4 மாநிலத்தில் இடைத்தேர்தல்: பாஜக ஒன்றில்கூட வெற்றி இல்லை

4 மாநிலத்தில் இடைத்தேர்தல்: பாஜக ஒன்றில்கூட வெற்றி இல்லை

நான்கு மாநிலத்தில் நடந்த இடைத்தேர்தலில் பாஜக ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை. இதனால் பாஜக அதிர்ச்சியடைந்துள்ளது.

அண்மையில் நடந்து முடிந்த உபி. மணிப்பூர், கோவா, உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சியை பிடித்தது. இந்த வெற்றி 2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்று பாஜகவினரும், அரசியல் விமர்சகர்களும் கூறிவந்தனர். இந்நிலையில், பீகார், மேற்குவங்கம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் மாநிலங்களில் இடைத்தேர்தல் அண்மையில் நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது.

மேற்குவங்கத்தில் பல்லிகஞ்ச் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் திரிணமூல் வேட்பாளர் பாபுல் சுப்ரியோ வெற்றிபெற்றுள்ளார். பாஜகவில் இருந்து திரிணமூல் கட்சிக்கு வந்த பாபுல் வெற்றி வாகை சூடியுள்ளார். 2-வது இடத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிடித்துள்ளது. 3-வது இடத்துக்கு பாஜக தள்ளப்பட்டது. மேற்குவங்கத்தில் எம்.பி. தேர்தலில் திரிணமூல் வேட்பாளர் சத்ருகன் சின்ஹா வெற்றி பெற்றுள்ளார்.

சத்தீஸ்கர், மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றிபெற்றுள்ளனர்.

பிஹாரில் எதிர்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதாதளம் வெற்றி பெற்று ஆளும் கூட்டணிக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. பக்சோஹன் தொகுதியில் பாஜக வேட்பாளரை 35,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.ஜே.டி. வேட்பாளர் தோற்கடித்தார்.

Related Stories

No stories found.