இடைத்தேர்தல் குறித்து பாஜக இருநாள்களில் முடிவெடுக்கும்: மாநில துணைத்தலைவர் பேட்டி

இடைத்தேர்தல் குறித்து பாஜக இருநாள்களில் முடிவெடுக்கும்: மாநில துணைத்தலைவர் பேட்டி

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து இரண்டு நாள்களில் பாஜக முடிவெடுக்கும் என முன்னாள் எம்.பியும், பாஜக மாநிலத் துணைத் தலைவருமான கே.பி.ராமலிங்கம் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் ஈரோட்டில் உள்ள பாஜக கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,” இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிபெற்றால் ஊழலுக்கும், தவறான கொள்கைகளுக்கும் ஆதரவு கொடுத்ததுபோல் ஆகிவிடும். பாஜக அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் எனவும், திமுகவை வீழ்த்த வேண்டும் எனவும் கருதுகிறது. ஓபிஎஸ் பாஜகவுக்கு ஆதரவு தருவேன் எனக் கூறியுள்ளார். பாஜக தலைவர் அண்ணாமலை இன்னும் 2 நாட்களில் தேர்தல் குறித்த முடிவை அறிவிப்பார்.

அதிமுகவின் இரு அணிகளும் இணைந்துகூட போட்டியிடலாம். இரட்டை இலை கிடைக்குமா, கிடைக்காதா என்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்பைப் பொறுத்தது. எங்களைப் பொறுத்தவரை அனைத்து சக்திகளும் ஒன்றிணைந்து திமுகவை வீழ்த்த வேண்டும்.

பாஜக தலைவர் அண்ணாமலை இந்து சமய அறநிலையத்துறையைக் கலைப்பேன் எனப் பேசியது குறித்துக் கேட்கிறீர்கள். அது, ஊழலைக் களைப்பதற்காக அவர் பேசியதுதான். துணிவு இருந்தால் பழநி, திருச்செந்தூர் போன்ற புகழ்வாய்ந்த கோயில்களின் வருமானம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடட்டும் பார்க்கலாம்.”என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in