பாரத் ஜோடோ யாத்திரையில் இணைந்தார் பிரபல குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங்!

பாரத் ஜோடோ யாத்திரையில் இணைந்தார் பிரபல குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங்!

மத்திய பிரதேசத்தில் நடைபெறும் பாரத் ஜோடோ யாத்திரையில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் ராகுல் காந்தியுடன் நேற்று இணைந்தார்

ராகுலும் தானும் மீசையை முறுக்கியபடி இருக்கும் புகைப்படத்தை விஜேந்தர் சிங் பகிர்ந்துள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக, "ராகுல் ஜி மற்றும் பிரியங்கா காந்தி ஜியால் ஈர்க்கப்பட்டு" யாத்திரையில் இணைவதாக விஜேந்தர் சிங் ட்வீட் செய்திருந்தார்.

2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்று, குத்துச்சண்டையில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார் விஜேந்தர் சிங். பல்வேறு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களையும் இவர் வென்றுள்ளார். இவர் 2019-ல் மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸில் சேர்ந்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in