பாஜகவில் சேர்ந்த திருச்சி சிவா எம்.பியின் மகன் கைது: பின்னணியில் நடந்தது என்ன?

பாஜகவில் சேர்ந்த திருச்சி சிவா எம்.பியின் மகன் கைது: பின்னணியில் நடந்தது என்ன?

திமுகவின் கொள்கைப் பரப்பு செயலாளராக உள்ள திருச்சி சிவா மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். இவரது மகன் சூர்யா. இவர் சமீபத்தில் திமுகவில் இருந்து விலகி மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் சேர்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பாஜக ஓபிசி பிரிவின் மாநில பொதுச் செயலாளராக சூர்யா நியமிக்கப்பட்டார்.

இன்று சூர்யாவை திருச்சி கண்டோமென்ட் காவல்துறையில் திடீரென கைது செய்தனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "கடந்த 11-ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்து உளுந்தூர் பேட்டை வழியாக காரில் திருச்சிக்கு சூர்யா சென்றுள்ளார். சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இவர் சென்ற காரின் பின்புறம் ஆம்னி பேருந்து மோதியது. இதில் கார் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பேருந்தின் உரிமையாளர், காருக்கு ஆகும் செலவை வழங்கி விடுவதாக கூறியுள்ளார். இச்சூழலில் அந்த ஆம்னி பேருந்தை சூர்யா எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் அவரை கைது செய்துள்ளோம்" என்று கூறினர். சூர்யா கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பாஜகவினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in