எல்.முருகன் பிரச்சார வாகனத்தில் அதிமுக கொடி... அவசரமாக அப்புறப்படுத்திய பாஜகவினர்

மத்திய அமைச்சர் எல்.முருகன் பிரச்சார வாகனத்தில் அதிமுக கொடி
மத்திய அமைச்சர் எல்.முருகன் பிரச்சார வாகனத்தில் அதிமுக கொடி

நீலகிரியில் பாஜக வேட்பாளரும், மத்திய அமைச்சருமான எல்.முருகன் பிரச்சார வாகனத்தில் அதிமுக கொடி இருந்ததைக் கண்டு, பாஜகவினர் அவசர அவசரமாக அதனை அகற்றினர்.

மத்திய அமைச்சர் எல்.முருகன்
மத்திய அமைச்சர் எல்.முருகன்

மக்களவைத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் எல்.முருகன் போட்டியிடுகிறார். இத்தொகுதியில் அவரை எதிர்த்து திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, அதிமுக சார்பில் லோகேஷ் தமிழ்செல்வன், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெயக்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

தேர்தல் நெருங்கியுள்ளதால், அனைத்து அரசியல் கட்சியினரும், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் கொளுத்தும் வெயிலிலும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பாஜக வேட்பாளரான மத்திய அமைச்சர் எல்.முருகன், திறந்த ஜீப்பில் நின்று கொண்டு தொகுதியில் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பாஜக வேட்பாளர் எல்.முருகன் வாகனத்தில் அதிமுக கொடி
பாஜக வேட்பாளர் எல்.முருகன் வாகனத்தில் அதிமுக கொடி

அப்போது அவரது ஜீப்பின் முன் பகுதியில் கூட்டணி கட்சிகளின் கொடிகள் இடம்பெற்றிருந்தன. அதில் பாஜக முன்பு கூட்டணியில் இருந்த அதிமுக கொடியும் இடம்பெற்றிருந்தது. தற்போது அதிமுக, பாஜக கூட்டணி உடைந்து இரு கட்சிகளும் தனித்தனியாக கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

இந்நிலையில் எல்.முருகன் வாகனத்தில் அதிமுக கொடி இருந்ததை கண்ட பாஜக நிர்வாகி ஒருவர் அவசர அவசரமாக அந்த கொடியை அகற்றும் பணியில் ஈடுபட்டார். இதுகுறித்த வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பாஜகவினர், அதிமுக மீதான பழைய பாசத்தில் அக்கட்சி கொடியையும் சேர்த்துக்கொண்டு பிரச்சாரத்துக்கு சென்றதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in