ஆட்டுக்குட்டி பரிசு... அபிராமி என பெயர் வைத்து கொஞ்சிய அண்ணாமலை!

அண்ணாமலைக்கு ஆட்டுக்குட்டி பரிசு
அண்ணாமலைக்கு ஆட்டுக்குட்டி பரிசு

புதுக்கோட்டையில் நடைபெற்ற ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையில் தொண்டர் ஒருவர் பரிசளித்த ஆட்டுக்குட்டிக்கு அபிராமி என அண்ணாமலை பெயர் சூட்டினார்.

பாஜக சார்பில் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “ முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி புதுக்கோட்டையை மாவட்டமாக அறிவித்தபோது, புதுக்கோட்டை மன்னர் அரண்மனையையே தமிழக அரசுக்கு வழங்கியுள்ளார். அத்தகைய மன்னருக்கு இன்று வரையிலும் மணி மண்டபம் கட்ட முடியாத நிலை உள்ளது. தமிழ்நாட்டில் இரண்டு கட்சிகளுக்கும் வாக்களித்து கைகள் தேய்ந்து போனதுதான் மிச்சம். புதுக்கோட்டையில் ஒரு நாடாளுமன்ற தொகுதி கூட கிடையாது. புதுக்கோட்டையில் நாடாளுமன்ற தொகுதி கொண்டு வர வேண்டும் என பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி உள்ளோம்” என்று பேசினார்.

அபிராமி என பெயர் வைத்து அபிராமி என்பவருக்கு பரிசளித்த அண்ணாமலை
அபிராமி என பெயர் வைத்து அபிராமி என்பவருக்கு பரிசளித்த அண்ணாமலை

அண்ணா சிலை அருகே நடந்த நிகழ்ச்சியின் போது, பாஜக தொண்டர் ஒருவர் அண்ணாமலைக்கு ஆட்டுக்குட்டி ஒன்றை பரிசளித்தார். அந்த ஆட்டுக்குட்டியை பெற்றுக்கொண்ட அண்ணாமலை, அதற்கு ‘அபிராமி’ என பெயர்சூட்டினார். தொடர்ந்து அபிராமி என்ற பெண்ணுக்கு ஆட்டை பரிசாக வழங்கி அண்ணாமலை, அதனை நல்லபடியாக பார்த்துக்கொள்ளுமாறு கூறினார்.

ஆடு ‘அபிராமி’ உடன் அபிராமி
ஆடு ‘அபிராமி’ உடன் அபிராமி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in