கடலூர் பாஜக ஐ.டி விங்க் தலைவரை ரவுண்டு கட்டிய நெல்லை போலீஸ்!

பாஜக நிர்வாகி ஜெயக்குமார்
பாஜக நிர்வாகி ஜெயக்குமார்கடலூர் பாஜக ஐ.டி விங்க் தலைவரை ரவுண்டு கட்டிய நெல்லை போலீஸ்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சமூக வலைதளத்தில் அவதூறு செய்த கடலூர் பாஜக ஐ.டி விங்க் தலைவரை திருநெல்வேலி போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், கீரப்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜெய்குமார். இவர் கடலூர் மேற்கு மாவட்ட பாஜக ஐ.டி. விங்க் தலைவராக உள்ளார்.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்தை தவறாக பதிவிட்டு சமூக வலைதளத்தில்(ஃபேஸ்புக்) பதிவிட்டிருந்தார். இதுகுறித்து திமுக நிர்வாகி, திருநெல்வேலி போலீஸாரிடம் புகார் செய்தார்.

இதன் அடிப்படையில் ஜெயக்குமார் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து கடலூர் சென்று ஜெயக்குமாரை கைது செய்த போலீஸார், அவரை விசாரணைக்காக திருநெல்வேலி அழைத்து வந்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in