ஒடிசா, பிஹாரில் ஆளும் கட்சிகளுக்கு அதிர்ச்சி: 7 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 4ல் வென்றது பாஜக!

ஒடிசா, பிஹாரில் ஆளும் கட்சிகளுக்கு அதிர்ச்சி: 7 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 4ல் வென்றது பாஜக!

மகாராஷ்டிரா, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் நடந்த 7 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 4 தொகுதிகளில் பாஜக வென்றுள்ளது.

தெலங்கானாவின் முனுகோடு, மகாராஷ்டிராவின் அந்தேரி கிழக்கு, பிஹாரின் மோகாமா மற்றும் கோபால்கஞ்ச் தொகுதிகள், ஹரியானாவின் அதம்பூர், ஒடிசாவிலுள்ள தாம் நகர், உத்தரபிரதேசத்தின் கோலாகோகர்நாத் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 3ம் தேதி நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது.

இதில் மகாராஷ்டிராவின் அந்தேரி கிழக்கு தொகுதியில் உத்தவ் தாக்கரே பிரிவின் சிவசேனா வேட்பாளர் ருதுஜா ரமேஷ் லட்கே 64959 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். பிஹாரின் மோகாமா தொகுதியில் ஆர்ஜேடி வேட்பாளர் நீலம் தேவி 16,741 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவை வீழ்த்தினார். பிஹாரின் கோபால்கஞ்ச் தொகுதியில் பாஜக வேட்பாளர் குஷம் தேவி 1794 வாக்குகள் வித்தியாசத்தில் ஆளும் ஆர்ஜேடி-ஜேடியு கூட்டணி வேட்பாளரை வீழ்த்தினார். ஹரியானாவின் அதம்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் பவ்யா பிஷ்னோய் காங்கிரஸ் வேட்பாளரைவிட 15,740 வாக்குகள் அதிகம் பெற்று வென்றார்.

ஒடிசாவிலுள்ள தாம் நகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சூர்யபன்சி சுராஜ் 9881 வாக்குகள் வித்தியாசத்தில் ஆளும் பிஜூ ஜனதா தள வேட்பாளரை வீழ்த்தி அதிர்ச்சியளித்தார்.உத்தரபிரதேசத்தின் கோலாகோகர்நாத் தொகுதியில் பாஜக வேட்பாளர் அமன் கிரி சமாஜ்வாதி வேட்பாளரை 34,298 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். தெலங்கானாவின் முனுகோடு தொகுதியில் ஆளும் டிஆர்எஸ் கட்சி பாஜக வேட்பாளரைவிட 10,309 வாக்குகள் முன்னிலையில் உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in