பாஜக பெண் எம்.பிக்கு 6 மாத சிறைத்தண்டனை...பதவி தப்புமா?

ரீட்டா பகுகுணா ஜோஷி
ரீட்டா பகுகுணா ஜோஷி

தேர்தல் விதிமுறைகளை மீறினார் என்பதற்காக உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக  பெண் எம்.பி க்கு ஆறு மாத சிறைத் தண்டனையும், 1,100 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ரீட்டா பகுகுணா ஜோஷி. இவர் கடந்த மக்களவைத் தேர்தலில் பிரயாக்ராஜ் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதற்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியில் இருந்த இவர் 2012-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டபோது தேர்தல் பிரச்சாரத்தில்  விதிகளை மீறி பிரச்சாரம் செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த 12 ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்தது. லக்னோ நீதிமன்றம் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்துள்ளது. 

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

அதில் பாஜக எம்.பி ரீட்டா பகுகுணா ஜோஷிக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு ரூ.1,100 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர் பதவி நீக்கம் செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏனெனில்  ராகுல் காந்திக்குச் சிறைத் தண்டனை உத்தரவு விதிக்கப்பட்டபோது அவரது எம்.பி பதவியை உடனடியாக பாஜக அரசு காலி செய்தது. தற்போது பாஜக எம்.பிக்கு  சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதால் அவரையும் பதவி நீக்கம் செய்யுமா பாஜக அரசு என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in