கர்நாடகா தேர்தலில் பாஜக வெற்றி பெறும்: முதல்வர் பசவராஜ் பொம்மை நம்பிக்கை

பசவராஜ் பொம்மை
பசவராஜ் பொம்மை கர்நாடகா தேர்தலில் பாஜக வெற்றி பெறும்: முதல்வர் பசவராஜ் பொம்மை நம்பிக்கை

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும் என்று மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது. மாநிலம் முழுவதும் உள்ள 36 மையங்களில் இப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் ஹூப்ளியில் உள்ள அனுமன் கோயிலில் முதல்வர் பசவராஜ் பொம்மை சிறப்பு பூஜை செய்தார். இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "பாஜகவுக்கு இன்று மிகப்பெரிய நாள். கர்நாடக மக்களின் தீர்ப்பு இன்று வெளியாகவுள்ளது. பாஜக அறுதிப் பெரும்பான்மை வாக்குகளுடன் பெரும் வெற்றி பெற்று நிலையான ஆட்சியை அமைக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். வாக்கு எண்ணிக்கை அமைதியான முறையில் நடக்க அனைத்து கட்சியினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்." என்றார்.

காலை 9.15. மணி நிலவரப்படி காங்கிரஸ் 114 தொகுதிகளிலும், பாஜக 92 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. மதச்சார்பற்ற ஜனதா தளம் 17 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in