பாஜக 2025க்குள் இடஒதுக்கீட்டை ரத்து செய்துவிடும்; காரணம் இதுதான்... பகீர் கிளப்பிய ரேவந்த் ரெட்டி!

ரேவந்த் ரெட்டி
ரேவந்த் ரெட்டி

எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசிக்களுக்கான இடஒதுக்கீட்டை பாஜக ரத்து செய்ய விரும்புவதாகவும், இதற்காகவே மக்களவைத் தேர்தலில் 400 இடங்களில் வெற்றிபெற அக்கட்சி முயற்சிப்பதாகவும் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார்.

முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பாக பாஜக மற்றும் காங்கிரஸுக்கு இடையே மோதல் வெடித்துள்ள நிலையில், எதிர்காலத்தில் விளிம்புநிலை சமூகங்களுக்கான இடஒதுக்கீட்டை பாஜக முற்றிலுமாக அகற்ற திட்டமிட்டுள்ளதாக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார்.

ரேவந்த் ரெட்டி
ரேவந்த் ரெட்டி

இன்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ரேவந்த் ரெட்டி, "பாஜக தனது சித்தாந்த வழிகாட்டியான ஆர்எஸ்எஸ்-சின் நூற்றாண்டு வருடமான 2025க்குள், எஸ்சி, எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீட்டை ரத்து செய்ய முயற்சிக்கின்றனர். இடஒதுக்கீடு குறித்து பலமுறை ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீட்டை முன்மொழிந்த மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்துவதை பாஜக முன்பு நிறுத்தியது.

எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி சமூகங்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்ய பாராளுமன்றத்தில் எண்ணிக்கையைப் பெறுவதற்காக மக்களவைத் தேர்தலில் 400 இடங்களை வெல்ல வேண்டும் என சொல்லி வருகின்றனர். இடஒதுக்கீட்டை ரத்து செய்ய முயற்சிக்கும் பா.ஜ.க.வை சிலரே ஆதரிக்கின்றனர். இந்த தேர்தல் எஸ்சி, எஸ்டி, பிசி இடஒதுக்கீடுகளுக்கான வாக்கெடுப்பு" என்று அவர் கூறினார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

முன்னதாக, மத்தியப் பிரதேசத்தில் புதன்கிழமை நடைபெற்ற பேரணியின் போது, இடஒதுக்கீடு குறித்த காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை கடுமையாகத் தாக்கிய பிரதமர் நரேந்திர மோடி, “தெலங்கானா காங்கிரஸ் முதல்வர் முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீட்டை உறுதி செய்வார். எஸ்சி/எஸ்டிகள்/ஓபிசிக்களிடம் இருந்து இடஒதுக்கீட்டைப் பறித்து அதன் சிறப்பு வாக்கு வங்கிக்கு வழங்க காங்கிரஸ் விரும்புகிறது. காங்கிரஸின் இந்த நடவடிக்கை நாடு முழுவதும் உள்ள ஓபிசி சமூகத்தினருக்கு எச்சரிக்கை மணி” என்று அவர் கூறினார்.

இதையும் வாசிக்கலாமே...

ராகுல் காந்தியின் ஆண்மையை பரிசோதிக்க தாய், மகள்களை அவருடன் தூங்க அனுப்புங்கள்... காங்கிரஸ் பிரமுகரின் சர்ச்சை பேச்சு!

கைதானவங்க நம்மாளுங்க தான்; ஆனா ரூ.4 கோடி எனதில்லை... நயினார் நாகேந்திரன் விளக்கம்!

அதிர்ச்சி... ஜிஎஸ்டி அலுவலகத்தில் அதிகாரியின் மண்டை உடைப்பு: சென்னையில் பரபரப்பு!

நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு... நாட்டின் கவனம் ஈர்க்கும் நட்சத்திரத் தொகுதிகள் இவைதான்!

முன்பு முதலை, இப்போது சிறுத்தை... படுகாயங்களுடன் உயிர் பிழைத்த முன்னாள் கிரிக்கெட் வீரர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in