மேகாலயாவில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 2024ல் பாஜகவை துடைத்தெறிவோம்: மம்தா பானர்ஜி உறுதி

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜிமேகாலயாவில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 2024ல் பாஜகவை துடைத்தெறிவோம்

மேகாலயாவில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவை துடைத்தெறிவோம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேகாலயாவின் கரோ ஹில்ஸில் உள்ள ராஜ்பாலாவில் நடந்த பொதுக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி உரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் மேகாலயா திரிணமூல் காங்கிரஸ் தலைவர் முகுல் சங்மாவும் கலந்து கொண்டார். அப்போது பேசிய மம்தா பானர்ஜி, “நாங்கள் ஒவ்வொரு மதத்தையும் நேசிக்கிறோம். நான் கோயில், மசூதி, தேவாலயம், குருத்வாராவுக்குச் செல்கிறேன். அனைவருடனும் வாழ்வதே மிகப்பெரிய மதம். மேற்கு வங்கத்தில் ஒவ்வொரு திருவிழாவையும் நாங்கள் கொண்டாடுகிறோம். நாங்கள் பாஜகவுக்கு எதிரான ஒரு போரில் போராடுகிறோம், அன்றாடம், பாஜக அமலாக்கத்துறை மற்றும் சிபிஐயை அனுப்புவதன் மூலம் எங்கள் கதவுகளைத் தட்டுகிறது.

நாங்கள் வடகிழக்கின் ஒவ்வொரு மூலையிலும் மெதுவாக செல்கிறோம், நாங்கள் உங்களைக் கவனிப்போம். நாங்கள் மேற்கு வங்கத்தில் அறிமுகப்படுத்திய ஒவ்வொரு திட்டத்தையும் இங்கே செயல்படுத்துவோம். நீங்கள் டி.எம்.சிக்கு வாக்களித்தால், 2024 பொதுத் தேர்தலில் பாஜகவை 'வாஷ்-அவுட்' செய்யலாம் என்று நான் உறுதியளிக்க முடியும். நாங்கள் இங்கே வென்றால் பதவியேற்பு விழாவிற்கும் வருவேன். எங்களுக்கு ஆதரவாக இருக்கும் அனைத்து எதிர்க்கட்சி முதலமைச்சர்களையும் அந்த விழாவிற்கு அழைப்போம்"என்று அவர் கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in