இந்தியா கூட்டணி ஆட்சியில் அமர வேண்டும்... முதல்வர் ஸ்டாலின் பேச்சு

ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா
ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா

அழகிய பூக்கள் நிறைந்த பூந்தோட்டமாக விளங்கும் இந்தியாவை பாஜக சிதைக்க நினைக்கிறது என தமிழக முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் - பிரதமர் மோடி
முதல்வர் ஸ்டாலின் - பிரதமர் மோடி

ஸ்பீக்கிங் ஃபார் இந்தியாவின் 3 வது எபிசோட்டில் முதல்வர் ஸ்டாலின் இன்று பேசினார். அதில், ‘’இந்தியா கூட்டணியிடம் இந்தியாவை ஒப்படைக்க வேண்டும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும். மாநில சுயாட்சி கொள்கை வெற்றி பெறுவதற்கு இந்தியா கூட்டணி ஆட்சியில் அமர வேண்டும்.

பாரதிய ஜனதா கட்சி ஆர்எஸ்எஸ். விரும்புகிற சர்வாதிகார ஆட்சியை அமைக்க முயற்சிக்கிறது. அழகிய பூக்கள் நிறைந்த இந்தியா என்ற பூந்தோட்டத்தை பாஜக சிதைக்க நினைக்கிறது . இந்தியாவின் ஜனநாயக அமைப்பையே சிதைக்கிறது. நமது 2 வது எபிசோடில் சிஏஜி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட பாஜக அரசின் 7 மெகா ஊழலை பற்றி பேசி இருந்தேன்.

அதை உண்மை என மத்திய அரசு ஒப்புக்கொள்ளும் விதமாக ஒரு விஷயத்தை செய்து உள்ளனர். இந்தியா முழுவதும் இந்த ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா உரை சென்றடைந்த பிறகு, அக்டோபர் 2 வது வாரத்தில் ஒரு செய்தி வந்தது. பாஜக அரசின் ஊழலை வெளிக்கொண்டு வந்த சிஏஜி அதிகாரிகள் செப்டம்பர் 12-ம் தேதியே கூண்டோடு இடமாற்றம் என்ற செய்தி அது. எவ்வளவு வேகம்?

ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா
ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா

நம் நாட்டின் நிர்வாக அமைப்பை உருவாக்கியவர்கள் ஒற்றைத் தன்மை கொண்ட நாடாக இல்லாமல் கூட்டாட்சி நிர்வாகம் கொண்ட நாடாக மாநிலங்களின் ஒன்றியமாக மாற்றினார்கள். நமது பிரதமர் இதற்கு முன் குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தார்.

அப்போதெல்லாம் மாநில உரிமைகளுக்கு ஆதரவாக நிறைய பேசினார். பிரதமராகி டெல்லிக்கு வந்தவுடன் அரசியலமைப்பு சட்டத்தின் முதல் வரியே அவருக்குப் பிடிக்காமல் போய்விட்டது. அந்த வரி என்னவென்றால் இந்தியா என்ற பாரத் மாநிலங்களின் ஒன்றியம் என்பது. மாநில முதலமைச்சராக இருந்த சமயத்தில் மாநில உரிமை பற்றி பேசிய பிரதமர் மோடி பிரதமராக பதவியேற்ற பின்னர் அதை பறிக்க முயல்கிறார்." என பேசியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in