பாஜகவிற்கு அடுத்த அதிர்ச்சி... கர்நாடகா மாநில துணைத்தலைவர் ராஜினாமா!

தனது சட்ட மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த கே.பி.நஞ்சுண்டி
தனது சட்ட மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த கே.பி.நஞ்சுண்டி

மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கர்நாடகா மாநில பாஜக துணைத்தலைவர் கே.பி.நஞ்சுண்டி தனது சட்ட மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளது பாஜகவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெற்றது. பாஜக மற்றும் முன்னாள் முதல்வர் குமாரசாமியின் ஜேடிஎஸ் கட்சிகள் செல்வாக்காக உள்ள இடங்களில் காங்கிரஸ் அதிக தொகுதிகளைக் கைப்பற்றியது.

கர்நாடகா முதல்வர் சித்தராமையா
கர்நாடகா முதல்வர் சித்தராமையா

இந்த நிலையில், கர்நாடகாவில் மக்களவைத் தேர்தல் ஏப்.26 மற்றும் மே 7 தேதி என இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்த மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் இணைந்து பாஜக போட்டியிடுகிறது.

ஆனால், பாஜகவைச் சேர்ந்த பலர், தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், கர்நாடகா பாஜக முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா அணியைச் சேர்ந்த அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் கே.பி.நஞ்சுண்டி, தனது சட்ட மேலவை உறுப்பினர் பதவியை இன்று ராஜினமா செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஸ்வகர்மா சமுதாயத்தைச் சேர்ந்த கே.பி.நஞ்சுண்டி, தனது சட்ட மேலவை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்த கடிதத்தை . சபாநாயகர் பசவராஜ் ஹொரட்டியிடம் வழங்கினார்.

கே.பி.நஞ்சுண்டி
கே.பி.நஞ்சுண்டி

பாஜகவில் தீவிரமாக செயல்பட்ட கே.பி.நஞ்சுண்டி அக்கட்சியின் மாநில துணைத்தலைவராக இருந்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவகுமாரை அவரது இல்லத்தில் கே.பி.நஞ்சுண்டி சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு நிகழ்ந்த 15 நாட்களில் நஞ்சுண்டி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் காங்கிரஸ் கட்சியில் இணைவது உறுதியாகி விட்டது. ஆனால், அவர் எப்போது இணைவார் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. அடுத்தடுத்து பலர் பாஜகவில் இருந்து விலகி வருவதால், அக்கட்சி தலைமை அதிர்ச்சியடைந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in