இந்தியாவை கோட்சேவின் நாடாக மாற்ற பாஜக முயற்சிக்கிறது: தேஜஸ்வி யாதவ் கோபம்

தேஜஸ்வி யாதவ்
தேஜஸ்வி யாதவ்இந்தியாவை கோட்சேவின் நாடாக மாற்ற பாஜக முயற்சிக்கிறது

சமீபத்தில் பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை குறித்து மத்திய அரசை கடுமையாக விமர்சித்த பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், இந்தியாவை நாதுராம் கோட்சேவின் நாடாக மாற்ற பாஜக முயற்சிப்பதாகக் கூறினார்.

பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், பிபிசி அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பாக மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். அவர், " பாஜக மத்திய அமைப்புகளை தவறாகப் பயன்படுத்துகிறார்கள். அவர்களுக்கு எதிராக பேசுபவர்கள் அல்லது உண்மையைப் பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற செய்தியை அவர்கள் கொடுக்க விரும்புகிறார்கள். பிபிசியில் என்ன நடந்தது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். குஜராத்தில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். மகாத்மா காந்தியின் நாட்டை நாதுராம் கோட்சேவின் நாடாக மாற்ற அவர்கள் விரும்புகிறார்கள். அவர்கள் இந்து ராஷ்டிரம் பற்றி பேசுகிறார்கள். ஆனால் நமது பன்முகத்தன்மையே நமக்கு அழகு" என்று ஒரு நிகழ்வில் பங்கேற்றபோது அவர் பேசினார்.

மேலும், "அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் வருமான வரி, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை போன்ற மத்திய அமைப்புகளை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துகிறது என்பதை பிபிசி மீதான ஐடி ரெய்டுகள் பிரதிபலிக்கின்றன. பிபிசி ஒரு பத்திரிகை, பத்திரிகை ஜனநாயகத்தின் நான்காவது தூண். இந்த சோதனை நடவடிக்கை ஜனநாயகத்தின் மீதான தாக்குதல், இதற்கு மத்திய அரசுதான் பொறுப்பு" என்று தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in