தேசிய அளவில் நன்கொடை வாங்குவதில் பாஜக முதலிடம்: கடந்த நிதியாண்டில். ரூ.1,917 கோடி வசூல்

தேசிய அளவில் நன்கொடை வாங்குவதில் பாஜக முதலிடம்: கடந்த நிதியாண்டில். ரூ.1,917 கோடி வசூல்

கடந்த நிதியாண்டில் ஆளுங்கட்சியான பாஜக பெற்ற நன்கொடை விவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் அக்கட்சி 1,917 கோடி ரூபாயை நன்கொடையாக பெற்றுள்ளது என்ற தகவலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

கடந்த 2021-22-ம் நிதியாண்டில், அங்கீகரிக்கப்பட்ட எட்டு தேசிய கட்சிகள் பெற்ற நன்கொடை விவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

மத்தியில் ஆளுங்கட்சியாக உள்ள பாஜக நன்கொடை வாங்குவதில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அக்கட்சி கடந்த நிதியாண்டில் பெற்ற நன்கொடை என்பது 1,917.12 கோடி ரூபாயாகும். அதில் தேர்தல் பத்திரங்கள் மூலம் மட்டும் பெற்ற தொகை .1,033.7 கோடி ரூபாயாகும். அக்கட்சியின் செலவீனமாக 854.46 கோடி ரூபாய் இருந்துள்ளது.

காங்கிரஸ் கட்சி கடந்த நிதியாண்டில் பெற்ற நன்கொடை 541.27 கோடி ரூபாயாகும். அதன் செலவுக்கணக்கு 400.41 கோடியாக ரூபாயாக இருந்துள்ளது என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in