பாஜகவுக்கு வாக்களிக்காவிட்டால் தண்டிக்கப்படுவீர்கள் என மக்களை மிரட்டுகிறார்கள்: மேகாலயா காங்கிரஸ் தலைவர்

பாஜகவுக்கு வாக்களிக்காவிட்டால் தண்டிக்கப்படுவீர்கள் என மக்களை மிரட்டுகிறார்கள்: மேகாலயா காங்கிரஸ் தலைவர்
பாஜகவுக்கு வாக்களிக்காவிட்டால் தண்டிக்கப்படுவீர்கள் என மக்களை மிரட்டுகிறார்கள்: மேகாலயா காங்கிரஸ் தலைவர்

பாஜகவுக்கு வாக்களிக்காவிட்டால் தண்டிக்கப்படுவீர்கள் என மேகாலயா மாநில வாக்காளர்களை மிரட்ட பாரதிய ஜனதா கட்சி முயற்சிப்பதாக அம்மாநில காங்கிரஸ் தலைவர் வின்சென்ட் எச் பலா குற்றம்சாட்டியுள்ளார்.

மேகாலயா தேர்தல் தொடர்பாக தனியார் செய்தி ஊடகத்திடம் பேசிய வின்சென்ட் எச் பலா, “எங்களுக்கு வாக்களிக்காவிட்டால் தண்டிக்கப்படுவார்கள் என்று பாஜக மேகாலயா மக்களை அச்சுறுத்த முயற்சிக்கிறது. ஆனால் மேகாலயா மக்கள் பாஜகவை விட மிகவும் புத்திசாலிகள். அவர்களுக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை. கடந்த முறை திடீரென காங்கிரஸ் பிளவுபட்டதால் அதை செய்தார்கள். ஆனால் இந்த முறை நாங்கள் நன்றாக தயாராகிவிட்டோம். இனி அது நடக்கும் என்று நான் நினைக்கவில்லை ”என்று கூறினார்.

மேலும், "கடந்த தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் நிலக்கரி சுரங்கத்தை அனுமதிப்பதாகவும், வேலை வாய்ப்புகளை தருவதாகவும், சட்டம் ஒழுங்கைக் கட்டுப்படுத்துவதாகவும் வாக்குறுதி அளித்தது. ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை, செய்ய முயற்சிக்கவில்லை. மேகாலயாவில் வேலையில்லா திண்டாட்டம் இப்போது இருப்பதைப் போல இதுவரை இருந்ததில்லை. மேகாலயா வரலாற்றில் முதன்முறையாக, போதைப்பொருள் இங்கு அதிகரித்துள்ளது, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, ஊழல் மிக அதிகமாக உள்ளது. அவர்கள் மக்களை முட்டாளாக்க முயற்சிக்கிறார்கள்.

பாஜக மூன்று இடங்களுக்கு மேல் தாண்டும் என்று நான் நினைக்கவில்லை, இரட்டை இலக்கம் என்ற கேள்வியே எழாது. மொத்தமுள்ள 60 இடங்களில், இன்றைய நிலவரப்படி 36-37 இடங்களில் நாங்கள் நல்ல நிலையில் இருக்கிறோம், நாளுக்கு நாள் முன்னேற்றம் அடைந்து வருகிறோம், நாங்கள் வெற்றி பெறுவோம்"என தெரிவித்துள்ளார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in