பாஜகவினர்தான் தேசவிரோதிகள்; பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்

மல்லிகார்ஜுன கார்கே
மல்லிகார்ஜுன கார்கேதேசவிரோதிகள்; பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்

ராகுல் காந்தி தேச விரோத கருவிகளின் நிரந்தர அங்கமாகிவிட்டார் என்று குறிப்பிட்ட பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவின் தாக்குதலுக்கு பதிலளித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் ஒருபோதும் பங்கேற்காத பாஜகவினரே தேச விரோதிகள் என்று தெரிவித்தார்

இது தொடர்பாகப் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, "பாஜகவினரே தேசவிரோதிகள். அவர்கள் ஒருபோதும் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை, ஆங்கிலேயர்களுக்காக உழைத்தார்கள். அவர்கள் இப்போது மற்றவர்களை தேச விரோதிகள் என்று அழைக்கிறார்கள். வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பணவீக்கம் போன்ற பிரச்சினைகளில் இருந்து திசைதிருப்ப இதைச் செய்கிறார்கள்.

ஜே.பி. நட்டாவின் கருத்துக்கு நான் கண்டனம் தெரிவிக்கிறேன். மன்னிப்பு கேட்பதில் அர்த்தமில்லை. இதற்கு நாடாளுமன்றத்தில் கடும் பதிலடி கொடுப்போம். இதற்கு ராகுல் காந்தியே பதில் அளிப்பார். அதனால் தான் அவர்கள் பயப்படுகிறார்கள். அவருக்கு நாடாளுமன்றத்தில் பேச ஏன் வாய்ப்பு கொடுக்கவில்லை” என்று கேள்வி எழுப்பினார்.

பாஜக மீதான தனது தாக்குதலை மேலும் கூர்மைப்படுத்திய கார்கே, "பிரதமர் மோடி கூட, ஆறு ஏழு நாடுகளுக்குச் சென்று, 'இந்தியாவில் பிறந்த நான் என்ன பாவம் செய்தேன் என்று மக்களும் தொழிலதிபரும் சொல்கிறார்கள்' என்று கூறினார். நாட்டு மக்களை அவமதித்த அவர் எங்களை தேசவிரோதி என்கிறார்? அவர்தான் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று கூறினார்.

முன்னதாக, இன்று பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, "காங்கிரஸ் கட்சி தேச விரோத செயல்களில் ஈடுபடுவது துரதிர்ஷ்டவசமானது. தேசத்தால் பலமுறை நிராகரிக்கப்பட்ட பிறகு, ராகுல் காந்தி இப்போது இந்த தேச விரோத கருவியின் நிரந்தர அங்கமாகிவிட்டார்" என்று ஒரு வீடியோ செய்தியில் கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in