நலம்தானா? - கட்டிப்பிடித்து வாழ்த்திக்கொண்ட தமிழிசை, தமிழச்சி தங்கபாண்டியன்!

ஒருவரை ஒருவர் வாழ்த்திக்கொண்ட திமுகவின் தமிழச்சி தங்கபாண்டியன், பாஜகவின் தமிழிசை செளந்தரராஜன்
ஒருவரை ஒருவர் வாழ்த்திக்கொண்ட திமுகவின் தமிழச்சி தங்கபாண்டியன், பாஜகவின் தமிழிசை செளந்தரராஜன்

தென் சென்னை மக்களவைத் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனும், பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜனும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்துக் கொண்டது தொண்டர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் 19ம் தேதி துவங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதையொட்டி தமிழ்நாட்டில் திமுக, அதிமுக மற்றும் பாஜக தலைமையில் பிற கட்சிகள் கூட்டணியாகவும், நாம் தமிழர் கட்சி தனித்தும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி உள்ளன. அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து களத்தில் இறங்கி உள்ளன.

தமிழச்சி, தமிழிசை
தமிழச்சி, தமிழிசை

காங்கிரஸ் கட்சி போட்டியிடும் பத்து தொகுதிகளில் எட்டு தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து விட்டது. இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட வேண்டும். பாஜகவை பொறுத்தவரை தமிழ்நாட்டில் 24 தொகுதிகளில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறது, திமுக 21 தொகுதிகளில் தமிழ்நாட்டில் போட்டியிடுகிறது. தென் சென்னை தொகுதியில் திமுக வேட்பாளராக தமிழச்சி தங்கபாண்டியன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதே தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தமிழிசை செளந்தர்ராஜன்
தமிழிசை செளந்தர்ராஜன்

இதையடுத்து இன்று இரு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும், தங்கள் தொகுதிக்குட்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இதைத் தொடர்ந்து தமிழிசை சௌந்தரராஜன், செய்தியாளர்களை சந்திப்பதற்காக வெளியே காத்திருந்தார். அப்போது வெளியில் வந்த தமிழச்சி தங்கபாண்டியனை கண்டதும் அவர் நட்புடன் புன்னகைத்தார். அவரிடம் வந்து கைகுலுக்கிக் கொண்ட தமிழச்சி தங்கபாண்டியன், அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். இது அங்கிருந்து அரசியல் கட்சியினர் இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதே சமயம் இருவரும் அரசியல் சார்ந்து பொது நாகரீகத்துடன் நடந்து கொண்டதற்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

#BREAKING : அஞ்சல் வழிக் கல்வி படிக்கலாமா, கூடாதா? பல்கலைக்கழக மானிய குழு விளக்கம்!

50க்கும் மேற்பட்ட கார்களில் திரண்ட நாம் தமிழர் கட்சியினர்... தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம்!

அம்பேத்கரை எப்படி மறந்தார் திருமா?! அதிருப்தியில் தொண்டர்கள்!

அதிகபட்ச வாக்குப்பதிவு... டெல்லி ஜேஎன்யு மாணவர் சங்கத் தேர்தலில் இடதுசாரிகள் கூட்டணி அமோக வெற்றி!

நிலைமை மாறிடுச்சு... கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள்... பகீர் கிளப்பிய முதல்வர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in