ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவு: அண்ணாமலை அறிவிப்பு

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவு - அண்ணாமலை அறிவிப்பு

’’ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் தென்னரசுக்கு ஆதரவாக பாஜக தேர்தல் பணிகளில் ஈடுபடும் என்றும் பொது நலன் கருதி, கூட்டணி நன்மைக்கருதி தங்களது வேட்பாளரை வாபஸ் பெற்ற ஓபிஎஸ்ஸுக்கு நன்றி’’ என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் தென்னரசுக்கு தமிழக பாஜக சார்பில் முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக, சட்டபூர்வ அதிமுக வேட்பாளரை முன்னிறுத்தி இருக்கும், இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், பொது நலன் கருதி, கூட்டணியின் நன்மைக்கருதி தங்களது வேட்பாளரை வாபஸ் பெற்றுள்ள ஓ.பன்னீர் செல்வத்திற்கும் நன்றிக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆளும் கட்சியின் அராஜகங்களை ஊழல்களை அத்துமீறல்களை மக்கள் விரோத போக்கை கொடுத்த வாக்கில் எதையும் நிறைவேற்ற முடியாமல், திணறிக்கொண்டிருக்கும் திறனற்ற திமுக அரசை வீழ்த்துவதற்காக ஓரணியில் திரண்டிருக்கும் நாம் அனைவரும் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை வெற்றிப் பெற செய்யப் பாடுபடுவோம்’’ என குறிப்பிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in