பாஜகவின் ஸ்லீப்பர் செல்கள் காங்கிரஸை சிதைக்க முயற்சி: பகீர் குற்றச்சாட்டு

பாஜகவின் ஸ்லீப்பர் செல்கள் காங்கிரஸை சிதைக்க முயற்சி: பகீர் குற்றச்சாட்டு

பாஜகவின் "ஸ்லீப்பிங் செல்கள்" காங்கிரஸ் கட்சிக்குள் நுழைந்து, அனைத்து வகையிலும் கட்சியை பலவீனப்படுத்த முயற்சிப்பதாக காங்கிரஸின் உத்தரகாண்ட் பிரிவுத் தலைவர் கரண் மஹாரா குற்றம் சாட்டியுள்ளார்.

டேராடூனில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய கரண் மஹாரா, " கட்சியை பலவீனப்படுத்த நினைப்பவர்கள் பாஜகவால் காங்கிரஸில் சேர்க்கப்பட்டவர்கள். அவர்கள் பாஜக ஆதரவாளர்கள். காங்கிரஸை வலுப்படுத்த முயற்சிக்கும் எவரையும் அவர்கள் நிச்சயமாக எதிர்ப்பார்கள் அல்லது அவர்களை நடத்தை ரீதியாக சிதைக்க முயற்சிப்பார்கள்" என்று கூறினார்.

பாஜக எம்எல்ஏக்களுடன் அமித் ஷா நடத்திய சந்திப்பைப் பற்றிக் குறிப்பிட்ட அவர், காங்கிரஸை பலவீனப்படுத்தி ஆட்சிக்கு வருவதற்கு “பிம்பம் சிதைப்பு” என்ற மந்திரத்தை பின்பற்றுமாறு அமித் ஷா அவர்களுக்கு அறிவுறுத்தியதாக கூறினார். ஸ்லீப்பர் செல்கள் குறித்து எந்த பெயரையும் தெரிவிக்கவில்லை என்றாலும், காங்கிரஸ் தலைவருக்கு எதிராக பேசும் எவரும் பாஜகவுடன் கைகோர்த்து இருக்க வேண்டும் என்று மஹாரா தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "பிம்பம் சிதைப்பு என்பது சிறப்பாகச் செயல்படும் காங்கிரஸ் தலைவர்களின் நடத்தையை விமர்சித்து அவதூறு பரப்புவதாகும். அதைத்தான் காங்கிரஸில் பாஜக விதைத்திருக்கிறது. அவர்கள் பகலில் காங்கிரஸ் அலுவலகத்திலும், இரவில் பாஜக தலைவர்களின் வீடுகளிலும் இருக்கிறார்கள். இதுபோன்ற செயல்களில் இருந்து கட்சி தொண்டர்கள் கவனமாக இருக்க வேண்டும் " என்றும் கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in