பாஜக மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா வீடு, கார் மீது திடீர் தாக்குதல்: பின்னணி என்ன?

பாஜக மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா வீடு, கார் மீது திடீர் தாக்குதல்: பின்னணி என்ன?

பாஜக மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பாவின் வீடு, காரை மர்மக் கும்பல் உடைத்தனர். இதனால் அவரது வீட்டு முன்பு பாஜக தொண்டர்கள் திரண்டு வருகின்றனர். இது தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக முன்னாள் எம்.பியாகவும், தூத்துக்குடி மாநகர மேயராகவும் இருந்தவர் சசிகலா புஷ்பா. தொடர்ந்து பாஜகவில் இணைந்த சசிகலா புஷ்பா அந்தக் கட்சியில் மாநிலத் துணைத் தலைவராக உள்ளார். சசிகலா புஷ்பாவின் வீடு தூத்துக்குடியில் தபால் தந்தி காலனியில் அமைந்து உள்ளது. இங்கு திடீரென இன்று வந்த மர்மக் கும்பல் வீட்டை அடித்து நொறுக்கியது. இதில் வீட்டில் இருந்த ஜன்னல் கண்ணாடிகள், முன்பக்கத்தில் இருந்த சேர்கள் ஆகியவை உடைத்து நொறுக்கப்பட்டன.

இதேபோல் வீட்டின் முன்பகுதியில் இருந்த சசிகலா புஷ்பாவின் கார் கண்ணாடியும் உடைத்து நொறுக்கப்பட்டது. சசிகலா புஷ்பா அந்த நேரத்தில் வீட்டில் இல்லை. நாகர்கோவிலில் நடந்த பாஜக கூட்டத்தில் கலந்துகொள்ள சசிகலா புஷ்பா சென்று இருந்தார். இந்த நேரத்தைப் பயன்படுத்தி மர்மக்கும்பல் வீட்டிற்குள் புகுந்து வீட்டின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. சசிகலா புஷ்பாவின் வீடு, கார் தாக்கப்பட்ட சம்பவம் தெரியவந்ததும் பாஜகவைச் சேர்ந்த பலரும் சசிகலா புஷ்பாவின் வீட்டின் முன்பு குவிந்து வருகின்றனர்.

பின்னணி என்ன?

பாஜக சார்பில் தூத்துக்குடியில் நேற்று கிறிஸ்துமஸ் விழா நடந்தது. இதில் பேசிய சசிகலா புஷ்பா திமுகவின் மூத்த நிர்வாகிகளை ஒருமையில் விமர்சித்ததாகவும், அதற்குப் பதிலாக இந்தத் தாக்குதல் நடத்திருக்கலாமா? என்னும் கோணத்திலும் பாஜகவினர் சந்தேகத்தைக் கிளப்பியுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in