திமுகவுக்கு கனவில் கூட வாக்களித்து விடாதீர்கள்: அண்ணாமலை வேண்டுகோள்!

திமுகவுக்கு கனவில் கூட வாக்களித்து விடாதீர்கள்: அண்ணாமலை வேண்டுகோள்!
தஞ்சை மாவட்டத்தில் பிரச்சாரம் செய்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

“கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றாத திமுகவுக்கு, கனவில் கூட வாக்களித்து விடாதீர்கள்” என தஞ்சாவூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாக்காளர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இன்று தஞ்சாவூரில் பாஜக வேட்பாளர்கள் அறிமுகப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:

“பாஜகவுக்கு மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. அதேநேரத்தில் திமுக அரசு மீது மக்களிடையே சலிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தைக் கூறி வருகின்றனர். இதற்காக திமுகவினர் வீடு, வீடாகச் செல்கின்றனர். இதற்கான அரசாணையோ, பட்ஜெட்டோ போடாமல் பணத்தை உடனடியாகக் கொடுக்கப் போகிறோம் எனக் கூறுவது முற்றிலும் ஏமாற்று வேலை.

இதுபற்றி இதுவரையிலும் பேசாத திமுக, இப்போது பேசத் தொடங்கியிருக்கிறது என்றால், மக்களின் கோபம் அவர்கள் மீது திரும்பிவிட்டது என்பது தெரிய வருகிறது. ஒரு பொய்யை மறைப்பதற்காக இன்னொரு பொய்யைப் பேசுகின்றனர். ஆனால், இந்த முறை மக்கள் ஏமாறமாட்டார்கள்.

மத்திய அரசின் சாதனைகளை அனைத்து வீடுகளுக்கும் கொண்டு சேர்த்துள்ளோம். திட்டப் பயனாளிகள் எல்லா வீடுகளிலும் இருப்பதால், பாஜகவுக்கு எழுச்சி இருக்கிறது.

வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் உரையாற்றும் அண்ணாமலை
வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் உரையாற்றும் அண்ணாமலை

திமுகவைப் பொறுத்தவரை ஒவ்வொரு மாதமும் ஒரு தலைப்பை எடுத்துக்கொண்டு பேசுவார்கள். ஜனவரி மாதம் குடியரசு தின விழா ஊர்தி குறித்து பொய்யான ஒரு படம் போட்டனர். அதை மக்கள் மறந்தவுடன், நீட் பிரச்சினையை எடுத்துப் பேசுகின்றனர்.

இந்தத் தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி மாலை முடிந்தவுடன், திமுக புதிதாக இன்னொரு தலைப்பை எடுத்துப் பேசும். இதையெல்லாம் தமிழக மக்கள் முழுமையாக உணர்ந்துவிட்டனர். சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் கூறிய 517 வாக்குறுதிகளில் எதையும் திமுக நிறைவேற்றவில்லை, எனவே, கனவில் கூட நீங்கள் திமுகவுக்கு வாக்களிக்களித்து விட வேண்டாம்” என்றார்.

Related Stories

No stories found.