`அந்த 4 பேர் கொண்ட கும்பல் தான் பாஜகவை இயக்குகிறது'- அதிமுகவில் இணைந்த நிர்வாகிகள் கொந்தளிப்பு

அதிமுகவில் இணைந்த பாஜக மாநில நிர்வாகிகள்
அதிமுகவில் இணைந்த பாஜக மாநில நிர்வாகிகள்`அந்த 4 பேர் கொண்ட கும்பல் தான் பாஜகவை இயக்குகிறது'- அதிமுகவில் இணைந்த நிர்வாகிகள் கொந்தளிப்பு

தமிழக பாஜகவின் மாநில நிர்வாகிகள் தீலிப் கண்ணன், அம்மு என்கிற ஜோதி, கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் அதிமுகவில் இணைந்துள்ளனர்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டியில், ’’அதிமுக பலமாக இல்லை. அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைந்த பலம் வாய்ந்த அதிமுகவையே பாஜக விரும்புகிறது’’ என கூறியிருந்தார். இது அதிமுக நிர்வாகிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் ஈபிஎஸ் மற்றும் அண்ணாமலை ஆதரவாளர்கள் வார்த்தை மோதலில் ஈடுபட்டனர்.

இந்த மோதல் காரணமாக தமிழக பாஜகவை அசைத்து பார்க்கும் வேலையில் அதிமுக இறங்கியுள்ளது. மேலும் அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறி பாஜகவில் இருந்து வெளியேறும் நிர்வாகிகளை அதிமுக தலைமை அரவணைக்கத் தொடங்கியுள்ளது.

இந்தநிலையில் சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள ஈபிஎஸ் இல்லத்தில், தமிழக பாஜகவின் அறிவு சார் பிரிவின் முன்னாள் மாநில செயலாளர் கிருஷ்ணன், தகவல் தொழில் நுட்ப பிரிவு மாநில செயலாளர் திலீப் கண்ணன், ஓபிசி அணியின் மாநில செயலாளர் அம்மு என்கிற ஜோதி , திருச்சி புறநகர் மாவட்ட துணைத்தலைவர் விஜய் உள்ளிட்ட பலரும் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

அதிமுகவில் இணைந்த திலீப் கண்ணன் கூறுகையில், ‘’ அண்ணாமலையின் நடவடிக்கைகள் காரணமாக நிர்வாகிகள் சுதந்திரமாக செயல்பட முடியாத சூழல் உள்ளது. நான்கு பேர் கொண்ட கும்பல் தான் பாஜகவை இயக்குகிறது. முருகன் தலைவராக இருக்கும் போது பாஜகவிற்கு மாற்றுக்கட்சியில் இருந்து முன்னணி தலைவர்களை கொண்டு வந்தார். ஆனால் இவர் வந்த பிறகு அதற்கான நடவடிக்கை எடுக்காமல் நன்றாக செயல்படும் நிர்வாகிகளை ஓரங்கட்டுவதில் குறியாக உள்ளார்.

என்னை போன்று பலரும் அண்ணாமலை மீது அதிருப்தியில் உள்ளனர். விரைவில் அவர்களும் வெளியே வருவார்கள் அப்போது அண்ணாமலை அவருடன் இருக்கும் ரெட்டியின் முகத்திரை கிழியும் ‘’ என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in