திமுகவில் இணைந்த பாஜக மாநில நிர்வாகி: தாமரைக் கட்சிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி

திமுகவில் இணைந்த பாஜக மாநில நிர்வாகி: தாமரைக் கட்சிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி

பாஜகவின் மாநில ஓபிசி அணி செயலாளர் சிவபாலன், தமிழ்நாடு அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார். இதனால் பாஜகவினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

தமிழகத்தில் கட்சி மாறும் படலம் சில நாட்களாகவே பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் பாஜக தகவல் தொழில்நுட்பப்பிரிவு செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அவரைத் தொடர்ந்து பல்வேறு மாநில, மாவட்ட நிர்வாகிகளும் அதிமுகவில் இணைந்தனர். இதனால் பாஜகவினர் பலரும் அதிமுகவையும், எடப்பாடி பழனிசாமியையும் கடுமையாக விமர்சித்தனர்.

இந்த நிலையில், இன்று கன்னியாகுமரியைச் சேர்ந்த பாஜகவின் மாநில ஓபிசி அணி செயலாளரான சிவபாலன், தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். கன்னியாகுமரி, நாகர்கோயில் பகுதிகள் பாஜக பலம் வாய்ந்த பகுதிகளாக உள்ளது. தற்போது அப்பகுதியைச் சேர்ந்த நிர்வாகியே விலகியுள்ளது சலசலப்பை உருவாக்கியுள்ளது. பாஜகவிலிருந்து தொடர்ச்சியாக பல மாநில நிர்வாகிகளும் விலகுவதால் அக்கட்சியினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in