‘முதலில் மோடியை முடிக்க வேண்டும்’ -காங்கிரஸ் தலைவர் சர்ச்சை பேச்சு!

சுக்ஜிந்தர் ரந்தாவா
சுக்ஜிந்தர் ரந்தாவா

‘அதானி, அம்பானியை ஒழிக்க, மோடியை முதலில் முடிக்க வேண்டும்’ என்று காங்கிரஸ் தலைவர் ஒருவர் பேசியது சர்ச்சையாகி உள்ளது.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பஞ்சாப்பின் முன்னாள் துணை முதல்வராக இருந்தவர் சுக்ஜிந்தர் ரந்தாவா. கூட்டம் ஒன்றில் இன்று பங்கேற்று பேசிய இவர், ’அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழு விசாரிக்க வேண்டும்’ என்பதை வலியுறுத்தினார்.

அப்போது, “தனது நண்பர்களின் ஆதாயத்துக்காக மோடி நாட்டை விற்று வருகிறார். இதனால் சாமானியர்கள் படும் வேதனை கொஞ்சம்நஞ்சமல்ல. நாம் அதானியை எதிர்க்க வேண்டியதில்லை. பாஜகவை ஒழிக்க வேண்டும். அதற்கு முதலில் மோடியை முடிக்க வேண்டும். பாஜக தானாக ஒழியும். அதன் பின்னர் அதானி, அம்பானி எல்லாம் தாமாக அழிவார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் அவர்கள் அனைவரும் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்” என்று பேசினார்.

சுக்ஜிந்தர் பேச்சுக்கு பாஜக கடுமையாக எதிர்வினையாற்றி இருக்கிறது. “காங்கிரஸார் எல்லா எல்லையையும் தாண்டி பேசுகிறார்கள். இப்படி பேசும் சுக்ஜிந்தர் போன்றவர்களை காங்கிரஸ் தலைமை கண்டித்து கட்சியை விட்டு நீக்குமா அல்லது பரிசு கொடுத்து பாராட்டுமா?’ என்று பாஜகவின் செய்தித் தொடர்பாளரான சேஷாத் பூனாவாலா கேள்வி எழுப்பியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in