‘இலவசமாக ‘காஷ்மீர் ஃபைல்ஸ்’ டிக்கெட் விநியோகித்ததுபோல் பெட்ரோல் கூப்பனும் வழங்கலாமே!’

பாஜகவை வாரிய ராஜஸ்தான் மாநில அமைச்சர்
‘இலவசமாக ‘காஷ்மீர் ஃபைல்ஸ்’ டிக்கெட் விநியோகித்ததுபோல் பெட்ரோல் கூப்பனும் வழங்கலாமே!’

பெட்ரோல், டீசல் விலை கடந்த ஒரு வாரமாகத் தொடர்ந்து உயர்ந்துவருகிறது. இந்நிலையில், மோடி தலைமையிலான பாஜக அரசைக் கடுமையாககி089 விமர்சித்திருக்கிறார் ராஜஸ்தான் அமைச்சர் பிரதாப் சிங் காச்சரியாவாஸ்.

1991-ல் காஷ்மீரிலிருந்து, பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்புகள் தந்த நெருக்கடியின் காரணமாக காஷ்மீர் பண்டிட்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட நிகழ்வின் அடிப்படையில் விவேக் அக்னிஹோத்ரி இயக்கிய ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம், பாஜகவினர் மத்தியில் மிகப் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. பிரதமர் மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் இப்படத்தை வெகுவாகப் பாராட்டியிருக்கிறார்கள். பாஜக ஆளும் மாநிலங்களில் இப்படத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

பல்வேறு மாநிலங்களில், இப்படம் திரையிடப்பட்ட திரையரங்குகளில் ஒட்டுமொத்தமாக டிக்கெட்டுகளை வாங்கி இலவசமாகவே மக்களுக்கு வழங்கும் அளவுக்கு பாஜக தலைவர்கள் இறங்கி வேலை பார்த்தனர். ஹரியாணாவில் இப்படி இலவசமாக டிக்கெட் வழங்கியதை இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரியே விமர்சித்திருந்தார்.

இதற்கிடையே, 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளியான இரண்டு வாரங்களுக்குப் பின்னர், பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுவருகிறது. குறிப்பாக, 5 மாநிலத் தேர்தலையொட்டி 4 மாதங்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும், தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர்தான் எரிபொருள் விலையேற்றம் நடந்தேறிவருகிறது என்றும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

இந்நிலையில் இதுகுறித்து நேற்று (மார்ச் 28) ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய பிரதாப் சிங் காச்சரியாவாஸ், “தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை பாஜக உயர்த்தியிருக்கிறது. அவர்கள் ராம பக்தர்கள் அல்ல, ராவண பக்தர்கள். ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்துக்கு பாஜக அமைச்சர்கள் இலவசமாக டிக்கெட் விநியோகித்தது போல, இலவசமாக பெட்ரோல், டீசல் கூப்பனும் வழங்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

Related Stories

No stories found.