ராமர் பாலம் விவகாரத்தில் மக்களை தவறாக வழிநடத்திய பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும்: சத்தீஸ்கர் முதல்வர் சீற்றம்

பூபேஷ் பகேல்
பூபேஷ் பகேல்படம்: பிடிஐ

ராமர் சேது பாலம் விவகாரத்தில் நாட்டை தவறாக வழிநடத்தியதற்காக மத்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல் கூறியுள்ளார். கடந்த காலங்களில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இதே கருத்தை கூறியபோது, அது ராமர் எதிர்ப்பு என்று விமர்சிக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம் ஹெலிபேடில் செய்தியாளர்களிடம் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங், ராமர் சேது பாலம் குறித்து நாடாளுமன்றத்தில் கூறியது பற்றிய கேள்விக்கு பதிலளித்த பூபேஷ் பகேல், "காங்கிரஸ் தலைமையிலான முந்தைய மத்திய அரசு இதை கூறியபோது, நாங்கள் ராமருக்கு எதிரானவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டோம். ஆனால் இப்போது ராமர் பக்தர்கள் என்று அழைக்கப்படுபவர்களின் அரசாங்கம், ராம சேது பாலம் பற்றிய உறுதியான ஆதாரம் இல்லை என்று பாராளுமன்றத்தில் கூறியுள்ளது. எனவே இப்போது அவர்களை எந்த பிரிவில் சேர்க்க வேண்டும்? மக்களை தவறாக வழிநடத்தியதற்காக பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும் ”என்று கூறினார். .

மேலும், ஆர்எஸ்எஸ்சும் அரசாங்கத்தின் ராமர் பால நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவிக்கவில்லை, அவர்கள் உண்மையான ராமர் பக்தர்களாக இருந்திருந்தால், அவர்கள் அரசாங்கத்தை விமர்சித்திருப்பார்கள் என்று அவர் கூறினார்.

ராமர் சேது பாலம் அல்லது நீரில் மூழ்கிய துவாரகா நகரம் இருந்ததை செயற்கைக்கோள் படங்கள் மூலம் நிரூபிக்க முடியுமா என்ற கேள்விக்கு மத்திய அமைச்சர் ஜிஜேந்திர சிங் ராஜ்யசபாவில் பதிலளித்தார். அப்போது, “இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் ராமர் சேது பகுதியின் உயர் தெளிவுத்திறன் படங்களை இந்திய செயற்கைக்கோள்கள் பெற்றுள்ளன.

இருப்பினும், செயற்கைக்கோள் படங்கள் மூலம் இந்த கட்டமைப்பின் தோற்றம் மற்றும் வயது பற்றிய நேரடி தகவலை வழங்க முடியாது. விண்வெளி தொழில்நுட்பத்தின் மூலம், மணல் திட்டுக்கள் மற்றும் தீவுகள், சில வகையான சுண்ணாம்புக் கற்கள் ஆகியவற்றைக் கண்டறிய முடிந்தது. அவை நிச்சயமாக பாலத்தின் எச்சங்கள் அல்லது பாலத்தின் பாகங்கள் என்று துல்லியமாகக் கூற முடியாது. ஆனால் அவை ஒரு குறிப்பிட்ட அளவு தொடர்ச்சியைக் கொண்டுள்ளன. சுருக்கமாக நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், அங்கு இருந்த சரியான கட்டமைப்பைக் குறிப்பிடுவது கடினம்” என்று கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in