அமைச்சர் மனோ தங்கராஜ் தொகுதியில் திமுகவிற்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக: நகர்மன்ற தேர்தலில் நடந்தது என்ன?

வெற்றி பெற்ற உண்ணி கிருஷ்ணன்.
வெற்றி பெற்ற உண்ணி கிருஷ்ணன்.

குமரி மாவட்ட அமைச்சர் மனோ தங்கராஜ் தொகுதியில் நடைபெற்ற நகர்மன்ற துணைத்தலைவர் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று திமுகவிற்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

குமரி மாவட்டம், பத்மநாபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினரான மனோ தங்கராஜ் தற்போது அமைச்சராக உள்ளார். இவரது தொகுதியில் உள்ள பத்மநாபபுரம் நகர்மன்றம் உள்ளது. இதன் தலைவராக திமுகவைச் சேர்ந்த அருள் சோபன் உள்ளார். துணைத் தலைவராக திமுக நகர செயலாளர் தக்கலை மணி இருந்தார். அவர் மறைவையடுத்து நகர்மன்ற துணைத்தலைவர் பதவி காலியானது.

இதனால் துணைத்தலைவர் பதவிக்கு நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நேற்று நடைபெற்றது. நகராட்சி தலைவர் அருள் சோபன் தலைமையில், ஆணையர் லெனின் இந்த தேர்தலை நடத்தினார். இதில் துணைத்தலைவர் பதவிக்கு திமுக கவுன்சிலர் ஜெயசுதா, பாஜக கவுன்சிலர் உண்ணிகிருஷ்ணன் மனுதாக்கல் செய்திருந்தனர்.

நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் திமுக 6, பாஜக 7 பேர், மதச்சார்பற்ற ஜனதா தளம்1, சுயேட்சை கவுன்சிலர்கள் 6 பேர் உள்ளனர். இவர்கள் நகராட்சி துணைத்தலைவர் தேர்தலில் வாக்களித்தனர். இதில் 12 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக கவுன்சிலர் உண்ணி கிருஷ்ணன் வெற்றி பெற்றார். அமைச்சர் தொகுதியில் திமுகவிடம் இருந்த துணைத்தலைவர் பதவியை பாஜக தட்டிப்பறித்துள்ளது குமரி மாவட்ட அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் திமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in