பிளவுபட்ட முஸ்லிம் வாக்குகள் - குஜராத்தில் காங்கிரஸ் படுதோல்வி: பாஜகவுக்கு வரலாற்று வெற்றி!

பிளவுபட்ட முஸ்லிம் வாக்குகள் - குஜராத்தில் காங்கிரஸ் படுதோல்வி: பாஜகவுக்கு வரலாற்று வெற்றி!

குஜராத்தில் முஸ்லிம் வாக்குகள் பிளவுபட்டதால் பாஜக பல இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. காங்கிரஸ் பல இடங்களில் படுதோல்வியை சந்தித்துள்ளது.

182 தொகுதிகள் கொண்ட சட்டப்பேரவையில் பாஜக 158 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 16 இடங்களிலும், ஆம் ஆத்மி 4 இடங்களிலும், சுயேச்சைகள் 3 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி 1 இடத்திலும் முன்னிலையில் உள்ளது. குஜராத்தில் பாஜக சாதனை வெற்றி பெற்றுள்ள நிலையில், அக்கட்சி ஒரு முஸ்லிமைக் கூட களமிறக்கவில்லை. ஆனாலும், முஸ்லிம்கள் அதிகம் உள்ள பல தொகுதிகளில் பாஜக வென்றுள்ளது.

குஜராத்தில் முஸ்லிம்கள் அதிகம் உள்ள பல இடங்களில், காங்கிரஸை தோற்கடித்து ஆளும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. அதிக முஸ்லிம் மக்கள்தொகை கொண்ட 17 இடங்களில் 12 இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. இதில் காங்கிரஸுக்கு வெறும் 5 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளது. வரலாற்று ரீதியாக, இந்த தொகுதிகளில் பெரும்பாலும் காங்கிரஸே வெற்றிபெற்று வந்தது.

உதாரணமாக, 10 ஆண்டுகளாக காங்கிரஸிடம் இருந்த முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் தரியாபூர் தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ கியாசுதீன் ஷேக், பாஜக வேட்பாளர் கவுசிக் ஜெயினிடம் தோல்வியடைந்தார். ஆம் ஆத்மி கட்சி தான் போட்டியிட்ட 16 முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தும் இடங்கள் எதிலும் பதிவு செய்யவில்லை. இருப்பினும், அசாதுதின் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியுடன் இணைந்து, காங்கிரஸின் பாரம்பரியமான முஸ்லிம் வாக்குகளை ஆம் ஆத்மி பிரித்துள்ளது. குஜராத்தில் ஏஐஎம்ஐஎம் கட்சியின் சார்பில் 13 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர், இதில் இரண்டு முஸ்லிம் அல்லாதவர்கள் போட்டியிட்டனர்.

குஜராத்தில் பில்கிஸ் பானோ வழக்கில் தண்டனை பெற்ற 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ததற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. ஆனாலும் இந்த வழக்கிலிருந்து விடுதலையானவர்களுக்கு மாலை அணிவித்து, வரவேற்ற பாஜக தலைவர் சந்திரசிங் ரவுல்ஜி கோத்ரா தொகுதியில் வெற்றி பெறுகிறார். இவர் இத்தொகுதியில் 6 முறையாக எம்எல்ஏவாக இருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in