பாஜக போராட்ட அறிவிப்பு; திமுக பிரமுகர் நீக்கம்

பாஜக போராட்ட அறிவிப்பு; திமுக பிரமுகர் நீக்கம்

விருதுநகரில் 22 வயது இளம்பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி, ஒரு வருடமாக பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக 10-வது வார்டு திமுக இளைஞரணி அமைப்பாளர் எஸ்.ஜுனைத் உள்ளிட்ட 8 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட பெண் பட்டியலினத்தவர் என்பதால், இப்பிரச்சினையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலையிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அக்கட்சி அமைதி காத்த நிலையில், பட்டியலின பெண்ணுக்கு நீதி கேட்டு வருகிற 24-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று விருதுநகர் கிழ்க்கு மாவட்ட பாஜக இன்று அறிவித்தது.

இந்த நிலையில், விருதுநகர் 10-வது வட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் எஸ்.ஜுனைத் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இது பாஜகவுக்கு கிடைத்த வெற்றி என்று கூறிவருகிறார்கள் அக்கட்சியினர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in