தமிழகத்தில் பாஜகவை பலப்படுத்தும் ஜே.பி.நட்டா: நவீன வசதிகளுடன் ஒரே நேரத்தில் 10 அலுவலகங்கள் திறப்பு

பாஜக  அலுவலகங்கள்
பாஜக அலுவலகங்கள் தமிழகத்தில் பாஜகவை பலப்படுத்தும் ஜே.பி.நட்டா: நவீன வசதிகளுடன் ஒரே நேரத்தில் 10 அலுவலகங்கள் திறப்பு

தமிழகத்தில் பாஜகவை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக பத்து மாவட்டங்களில் பாஜக அலுவலகங்களை தேசிய  தலைவர் ஜே.பி.நட்டா  திறந்து வைக்கிறார்.

தென் மாநிலங்களை  குறி வைத்துள்ள பாஜக அனைத்து மாவட்டங்களிலும் பாஜகவுக்கு என நவீன வசதிகளை உள்ளடக்கிய அலுவலகங்களை திறக்க திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே சென்னை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் பாஜகவுக்கு அலுவலகம் இருக்கும் நிலையில் தற்போது மேலும் 10 மாவட்டங்களில் பாஜக அலுவலகங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.  

இவற்றில் கூட்ட அரங்கம், நூலகம், உணவு விடுதி, தங்கும் அறைகள், ஐ.டி. பிரிவு, மாவட்ட நிர்வாகிகள் அறைகள்  என பல நவீன வசதிகள்  அமைந்துள்ளன. இவை அனைத்தும் ஒரே அமைப்பில் கட்டப்பட்டுள்ளன. 

இவற்றை திறந்து  வைக்க பாஜக பேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று கிருஷ்ணகிரி வருகிறார். அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள  பாஜக அலுவலகத்தை திறந்து வைக்கும் அவர், அங்கிருந்தவாறே தருமபுரி, திருச்சி, நாமக்கல், தேனி, விருதுநகர், தூத்துக்குடி, புதுக்கோட்டை, விழுப்புரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில்  புதிய அலுவலகங்களை காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.

கிருஷ்ணகிரியில் நடைபெறும் திறப்பு விழாவில் கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொள்கின்றனர். இன்றைய தினம் மேலும் சில மாவட்டங்களில் பாஜக அலுவலகத்திற்கான அடிக்கல்லையும் இன்று  நட்டா நாட்டுகிறார். 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in