தமிழக அரசுக்கு அண்ணாமலை சொன்ன திடீர் நன்றி

தமிழக அரசுக்கு அண்ணாமலை சொன்ன திடீர் நன்றி

மாமன்னர் ராஜராஜ சோழன் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்த தமிழக அரசுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.

தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த நாள் விழா ஆண்டுதோறும் சதய விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 1,037-வது சதய விழா இன்று காலை மங்கள இசையுடன் தொடங்கியது. இந்நிலையில், மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுப்பப்பட்டது. இதனை ஏற்று இந்த ஆண்டு முதல் மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்பை பல்வேறு தரப்பினர் வரவேற்றுள்ளனர்.

இந்நிலையில, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில், "மாமன்னர் ராஜராஜ சோழன் பிறந்த தினத்தை அரசு விழாவாக அறிவித்த தமிழக அரசுக்கு தமிழக பாஜக சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அறிவிப்பு வந்த இந்த நன்னாளில், தமிழக அரசுக்கு பாஜக சார்பாக கோரிக்கையை தமிழக மக்களின் சார்பாக முன்வைக்கிறோம்.

அகில உலகம் போற்றும் தஞ்சை பெரிய கோவில் கண்ட மாமன்னர் ராஜராஜ சோழனின் நினைவிடம் உடையாளூரில் உள்ளது. பராமரிப்பின்றி சிதலமடைந்த நிலையில் இருக்கும் மாமன்னரின் நினைவிடத்தை தமிழக அரசு புனரமைத்து அவ்விடத்தில் ஒரு மாபெரும் நினைவிடம் அமைத்திட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. இதனை முதல்வர் செயல்படுத்திட வேண்டும்" என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in