பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
சிதம்பரத்தில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற இருந்தது. இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று சிறப்புரையாற்றுவதாக இருந்தது. ஆனால், இந்த பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. இதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று இரவு அவர் வெளியிட்டுள்ள பதிவில், "சிதம்பரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சித் தொண்டர்கள், மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உடல்நலக்குறைவால் என்னால் இன்றைய பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை.
அதற்காக கட்சி தொண்டர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அடுத்த முறை சிதம்பரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உங்கள் அனைவரையும் சந்திக்க ஆவலுடன் உள்ளேன்" என்று தெரிவித்துள்ளார். அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என அப்பதிவிற்கு தொண்டர்கள் வேண்டிக்கொண்டுள்ளனர்.