ஆமாம், நான் லேகியம்தான் விற்கிறேன்... காண்டான அண்ணாமலை!

பாஜக தலைவர் அண்ணாமலை
பாஜக தலைவர் அண்ணாமலை

பங்காளி கட்சிகளை ஒழிக்க வேண்டும் என்பதற்காக லேகியம் விற்றுக் கொண்டிருக்கின்றேன் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

அண்ணாமலையின் யாத்திரை
அண்ணாமலையின் யாத்திரை

திருவள்ளூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் யாத்திரையை நேற்று மாலை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்," தமிழ்நாட்டில் லஞ்ச லாவண்யம் இல்லாத சாதி அரசியல், குடும்ப அரசியல் இல்லாத, அடாவடித்தனம் இல்லாத அரசியலை உருவாக்க வேண்டும் என்பதற்காக பாஜக தனித்து நின்று கொண்டிருக்கிறது. இதைப் பார்த்து பங்காளி கட்சியைச் சேர்ந்த ஒருவர், அண்ணாமலை லேகியம் விற்பதாக கூறுகிறார்.

நான் லேகியம்தான் விற்கிறேன். நம்ம லேகியத்தைப் பயன்படுத்தினால் குடும்ப ஆட்சி இருக்காது, குடும்ப அரசியல் இருக்காது, லஞ்ச லாவண்யம் இருக்காது, அடாவடித்தனம் இருக்காது. தரையில் தவழ வேண்டிய வேலை இல்லாமல் தலை நிமிர்ந்து நின்று நேர்மையாக ஆட்சி செய்ய முடியும்.

அண்ணாமலை
அண்ணாமலை

நான் லேகியம் விற்பதே பங்காளி கட்சிகளை ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான். இத்தனை ஆண்டு காலம் தமிழகத்திலே திராவிடத்திற்கு மாற்றாக ஒரு கட்சியை வேண்டும் என்று நினைத்தோம். அது பாஜக பூர்த்தி செய்யுமா என்ற ஏக்கத்திற்கும், ஆவலுக்கும். 2024 மக்களவைத் தேர்தல் நிச்சயமாக பதில் சொல்லும். வரும் தேர்தலில் 30 சதவீதம் வாக்குகளைப் பெற்று பாஜக வெற்றி பெறும். தமிழ்நாட்டில் இருந்து பாரத பிரதமர் மோடி தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வார்கள்.

காங்கிரஸ் கட்சி ஐசியுவிலிருந்து எழுந்திருப்பதே தேர்தலுக்கு ஒரு மாதம் இருக்கும் போதுதான். தமிழ்நாட்டில் தனியாக 12 சீட் ஜெயிப்பார்கள் என்று கே.எஸ்.அழகிரி சொல்கிறார், இந்தியா முழுவதும் நின்றாலும் கூட அவர்களால் 12 சீட்டுகள் ஜெயிக்க முடியாது. சென்னையில் பெருவெள்ளம் தாக்கிய போது ஒரு பிஸ்கட், பால் பாக்கெட் கூட காங்கிரஸ் கட்சியினர் கொடுக்கவில்லை. அந்த கட்சி இருப்பதே தேர்தலில் நிற்பதற்கும், கூட்டணி பேரம் பேசுவதற்கும் மட்டும்தான்” என்று குற்றம் சாட்டினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in