அபிஷேக் பானர்ஜியைக் கொல்ல பாஜக சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அபிஷேக் பானர்ஜியைக் கொல்ல பாஜக சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் பூத் தலைவர் வீட்டில் குண்டுவெடிப்பு நடந்ததை அடுத்து, இது அபிஷேக் பானர்ஜியைக் கொல்ல பாஜக நடத்திய சதி என்று அக்கட்சி கூறியுள்ளது.

பாஜக தலைவரான சுவேந்து அதிகாரியின் கோட்டையான புர்பா மேதினிபூரின் கோண்டாய் பகுதியில் ஒரு கட்சி நிகழ்ச்சியில் அபிஷேக் பானர்ஜி கலந்துகொண்டார். இந்த நிலையில் புர்பா மேதினிபூரில் உள்ள திரிணமூல் காங்கிரஸ் பூத் தலைவர் ராஜ்குமார் மன்னாவின் வீட்டில் குண்டுவெடிப்பு நடந்தது.

இது தொடர்பாக பேசிய திரிணமூல் நிர்வாகி ஷஷி பஞ்சா, "இறுதியாக, கோண்டாயில் வெடிகுண்டுகள் உள்ளன, அவை வீசப்படப் போகின்றன என்பதை சுவேந்து அதிகாரி ஒப்புக்கொண்டார். மேலும் இன்று கோண்டாயில் யாருடைய பேரணி நடக்கிறது? அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜியின் பேரணி நடக்கிறது. இதனால் சுவேந்து அதிகாரி கோண்டாய் பேரணியில் இந்த குண்டுகளை வீச செய்துள்ளார். நீங்கள் பயப்படுகிறீர்கள்" என்று

கூறினார்.

புர்பா மேதினிபூர் திரிணமூல் பூத் தலைவர் ஒருவரின் வீட்டில் சனிக்கிழமை அதிகாலையில் குண்டுவெடித்தது. இந்த சம்பவத்தில் திரிணாமுல் காங்கிரஸ் பூத் தலைவர் ராஜ்குமார் மன்னா உள்பட 3 பேர் உயிரிழந்தனர். கோன்டாயில் அபிஷேக் பானர்ஜியின் பொதுக் கூட்டத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்த குண்டுவெடிப்பு நடந்தது. பொதுக்கூட்டம் நடந்த இடம் குண்டுவெடிப்பு நடந்த இடத்திலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது.

முன்னதாக, திரிணமூல் காங்கிரஸ் கட்சி வெடிகுண்டுகளை தயாரிப்பது நிரூபணமாகியுள்ளதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in