பாஜகவா? சிபிஎம் காங்கிரஸ் கூட்டணியா?: 4 முனைப் போட்டியில் திரிபுரா; நாளை வாக்குப்பதிவு

வாக்குப்பதிவு இயந்திரம்
வாக்குப்பதிவு இயந்திரம்4 முனைப் போட்டியில் திரிபுரா

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இங்கே பாஜக கூட்டணி, இடதுசாரிகள் - காங்கிரஸ் கூட்டணி, திப்ரா மோதா, திரிணமூல் காங்கிரஸ் என நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.

திரிபுரா மாநிலத்தில் வெறும் 1.4 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் கடந்த 2018-ல் தனது 25 ஆண்டுகால ஆட்சியை பாஜகவிடம் பறிகொடுத்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. 2013 திரிபுரா தேர்தலில் வெறும் 1.54% சதவீத வாக்குகளைப் பெற்றிருந்த பாஜக, அடுத்த ஐந்து ஆண்டுகளில் 43.6% வாக்குகளுடன் அம்மாநிலத்தின் ஆட்சியை கைப்பற்றியது. தற்போது பாஜகவின் முதல்வராக மாணிக் சாஹா உள்ளார். இந்த தேர்தலில் பாஜக 55 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான திரிபுரா பழங்குடியின மக்கள் முன்னணி கட்சி(ஐபிஎப்டி) 6 இடங்களிலும் போட்டியிடுகிறது.

இந்த முறை எப்படியாவது வெற்றி பெற வேண்டும், வாக்குகளை சிதறவிடக்கூடாது என்ற நோக்கத்தில் காங்கிரஸ் கட்சியையும் உள்ளடக்கி கூட்டணியை அமைத்துள்ளது சிபிஎம். இந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 43 இடங்களிலும், காங்கிரஸ் 13 இடங்களிலும், இதர கூட்டணி கட்சிகள் 4 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

அதேசமயம், திரிபுராவில் முக்கிய கட்சியாக வளர்ந்துள்ள மற்றொரு எதிர்க்கட்சியான திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் இங்கே தனியாக 28 தொகுதிகளில் களம் காண்கிறது. காங்கிரஸ் கட்சியிலிருந்து 2019-ல் பிரிந்து மாநிலக் கட்சியாக வளர்ந்து வரும் டிப்ரா மோதா கட்சியும் 42 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுகிறது. இதனால் 4 முனை போட்டியில் திரிபுரா தேர்தல் களம் சூடுபறக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in