மணிப்பூரில் அடங்காத கலவரம்! பாஜக அலுவலகம் தீ வைத்து எரிப்பு

மணிப்பூரில் அடங்காத கலவரம்! பாஜக அலுவலகம் தீ வைத்து எரிப்பு

மணிப்பூர் மாநிலத்தில் சிறிது நாட்களாக அடங்கி இருந்த கலவர நெருப்பு இரண்டு மாணவர்கள் கொல்லப்பட்ட படங்கள் வெளியாகி மீண்டும் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்திருக்கிறது.

மணிப்பூரில் 2 மாணவர்கள் கடத்தி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் மாநிலம் முழுவதும் தீவிரமான  போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று மாணவர்கள் பேரணியாக சென்றபோது மாணவர்களுக்கும், போலீஸாருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் 30 மாணவர்கள் காயம் அடைந்தனர்.

இந்நிலையில் மணிப்பூரில் உள்ள கவுபால் மாவட்டத்தில் உள்ள பா.ஜனதா கட்சியின் மண்டல அலுவலகத்துக்கு சிலர் தீ வைத்தனர். இதில் பா.ஜனதா கட்சி அலுவலகம்  பற்றி எரிந்தது. மேலும் அங்கிருந்த ஜன்னல் கண்ணாடிகளையும்,  வாகனங்களையும் சிலர் அடித்து நொறுக்கினார்கள். மாணவர்கள் போராட்டம் காரணமாக அங்கு இணையதள சேவைகள் முடக்கப்பட்டன.

இந்நிலையில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் அமைதி நிலவ மாணவர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று முதலமைச்சர்   பிரேன்சிங் கேட்டுக் கொண்டுள்ளார். 2 மாணவர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் விசாரணை நடந்து வருகிறது. "குற்றவாளிகளுக்கு அதிகப்பட்ச தண்டனை வழங்கப்படுவதை உறுதி செய்வோம்" என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ராகேஷ் பல்வாலை மணிப்பூர் மாநிலத்துக்கு திருப்பி அனுப்ப மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. தற்போது காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் மூத்த போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வரும் அவர் மணிப்பூரில் வன்முறையை தடுக்க அந்த மாநிலத்தில் பணியாற்றுவார் என்று மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in