மத்திய அமைச்சர்கள் சோனோவால், எல்.முருகன் மாநிலங்களவைக்குப் போட்டி

இருவருக்கும் வெற்றி உறுதி
மத்திய அமைச்சர்கள்  சோனோவால், எல்.முருகன்
மாநிலங்களவைக்குப் போட்டி
சர்வானந்த சோனோவால், எல்.முருகன்

மத்திய அமைச்சரவையில் புதிதாகச் சேர்க்கப்பட்டிருக்கும் சர்வானந்த சோனோவால், எல்.முருகன் ஆகியோர், பாஜக சார்பில் முறையே அசாமிலிருந்தும், மத்திய பிரதேசத்திலிருந்தும் மாநிலங்களவைக்குப் போட்டியிடுகிறார்கள். 2 மாநில சட்டப்பேரவைகளிலும் பாஜகவுக்குப் பெரும்பான்மையான உறுப்பினர்கள் இருப்பதால், இருவரின் வெற்றியும் உறுதியாகிவிட்டது.

அசாமில், விஸ்வஜீத் தைமாரி சட்டப்பேரவை சபாநாயகராகப் பதவி ஏற்பதற்காக மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார். மத்திய அமைச்சராக இருந்த தாவர்சந்த் கெலாட், கர்நாடக மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதை அடுத்து மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார்.

இந்நிலையில், சர்வானந்த சோனோவால், எல்.முருகன் இருவரும் மாநிலங்களவைக்குப் போட்டியிடுவார்கள் என்பதை பாஜக தலைமை டெல்லியில் இன்று (செப்.18) அறிவித்தது. அக்.4-ல் தேர்தல் நடைபெறுகிறது.

சர்வானந்த சோனோவால், 5 ஆண்டுகள் அசாம் முதலமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.