ஜவ்வாக இழுக்கும் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை... ஜே.பி.நட்டா இன்று சென்னை வருகிறார்!

ஜே.பி.நட்டா
ஜே.பி.நட்டா

மக்களவைத் தேர்தல் குறித்த ஆலோசனையில்  கலந்துகொள்ள பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழ்நாட்டிற்கு இன்று வருகை தரும் நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நிறைவு பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

நட்டா
நட்டா

மக்களவைத் தேர்தல் நெருங்கக்கூடிய நிலையில் பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஒருநாள் பயணமாக சென்னைக்கு இன்று வருகிறார். டெல்லியில் இருந்து  காலை 9.20 மணியளவில் புறப்படும் நட்டா, சென்னை விமான நிலையத்திற்கு மதியம் 12.45 மணியளவில் வரவுள்ளார். விமான நிலையத்தில் அவரை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் வரவேற்கின்றனர்.

அங்கிருந்து  தனியார் ஓட்டலுக்குச் செல்லும்  நட்டா, பிற்பகல் 12.55 மணியளவில் அங்கு நடைபெறும்  மையக்குழு கூட்டத்தில் கலந்துகொள்கிறார். இந்த கூட்டத்தில் சுமார் 13 முக்கிய பாஜக நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். அப்போது கூட்டணி கட்சித் தலைவர்களும் நட்டாவை சந்திக்கின்றனர். தமிழகத்தில் தேர்தலை சந்திப்பது குறித்த ஆலோசனை நடைபெறுகிறது.

நட்டா
நட்டா

அப்போது தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் நடத்தி வரும் கூட்டணி பேச்சுவார்த்தை எந்த அளவில் இருக்கிறது என்பது தொடர்பாக நட்டா கேட்டறிகிறார். இந்த இரண்டு கட்சிகளின் தலைவர்களுடன் நட்டா இன்று சந்தித்து கூட்டணியை இறுதி செய்வதாக முன்பு திட்டமிடப்பட்டிருந்தது.  இந்த இரண்டு கட்சிகளும் அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதால் இன்று அவர்கள் நட்டாவை சந்திப்பது கடினம் என்று தற்போது கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து 3.45 மணியில் இருந்து 5 மணிவரை  காட்டாங்குளத்தூரில் உள்ள கல்லூரி வளாகத்தில் 5,000 நிர்வாகிகள் கலந்துகொள்ளும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்தும், பூத் கமிட்டியை வலுப்படுத்துவது உள்ளிட்டவைகள் குறித்தும் நிர்வாகிகளுடன் விரிவான ஆலோசனை  நடைபெறவுள்ளது.

அதைத் தொடர்ந்து, 200-வது சட்டப்பேரவைத் தொகுதியாக துறைமுகம் தொகுதியில் நடைபெற உள்ள அண்ணாமலையின் நடைபயணத்தில் நட்டா கலந்து கொள்கிறார். இதைத்தொடர்ந்து மாலை 7 மணிக்கு தங்கசாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றுகிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in