நாங்கள் வாழ்த்தினோமே, நீங்கள் ஏன் வாழ்த்தவில்லை?

திமுகவுக்கு பாஜக நாராயணன் திருப்பதி கேள்வி
நாங்கள் வாழ்த்தினோமே, நீங்கள் ஏன் வாழ்த்தவில்லை?

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், 4 மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி வெற்றிபெற்றுள்ளது. இதற்கு தமிழ்நாட்டில் இருந்து அதிமுகவும், அதன் கூட்டணி கட்சியான தமாகாவும் மட்டுமே வாழ்த்து தெரிவித்துள்ளன. திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகைதீன் மட்டுமே வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி
பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி

இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறுகையில், "கொள்கைகளுக்கு எதிரானவர்களாக இருந்தாலும், வெற்றிபெற்றவர்களைப் பாராட்டுவது தமிழர்களின் பண்பாடு. தமிழ்நாட்டில் திமுக வெற்றிபெற்று ஆட்சியமைத்தபோது, பாரதிய ஜனதா கட்சி வாழ்த்து தெரிவித்தது. பிரதமர் மோடியும் கூட வாழ்த்து தெரிவித்தார். ஆனால், திமுகவோ, முதல்வர் ஸ்டாலினோ இதுவரையில் பாஜகவுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. ஒருவேளை கடுமையான பணிச்சுமைக்கு நடுவே, 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து முதல்வரின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்படவில்லை என்று நினைக்கிறேன். எனவே, தமிழர்களின் பண்பாட்டை அவருக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்" என்றார்.

Related Stories

No stories found.