பால் தினகரனை தேடிப்போன பாஜக எம்எல்ஏ - வெடித்துக் கிளம்பிய விமர்சனங்கள்!

பால் தினகரனை தேடிப்போன பாஜக எம்எல்ஏ - வெடித்துக் கிளம்பிய விமர்சனங்கள்!

இயேசு அழைக்கிறார் அமைப்பின் நிர்வாகி பால் தினகரனை பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் தேடிப்போய் பிறந்தநாள் வாழ்த்து சொல்லியிருக்கிறார்.

அதிமுகவில் முன்னாள் அமைச்சராக இருந்தவர் நயினார் நாகேந்திரன். இவர் பாஜகவில் இணைந்த கையோடு, கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் நிறுத்தப்பட்டார். ஆனால் தோல்வி அடைந்தார். தொடர்ந்து கடந்த சட்டமன்றத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு வென்றார் நயினார் நாகேந்திரன்.

பாஜக இந்துத்துவ அரசியலை மட்டுமே முன்னெடுத்துவரும் நிலையில் பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், இன்று இயேசு அழைக்கிறார் என்னும் அமைப்பை நிர்வகிக்கும் பால் தினகரனின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் இருக்கும் அவரது இல்லத்திற்கே தேடிப்போய் வாழ்த்துச் சொல்லியுள்ளார். பூங்கொத்து கொடுத்து, பால் தினகரனை நயினார் வாழ்த்தும் புகைப்படத்தை அவரே தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளர். ஆனால் நயினார் நாகேந்திரனை பின் தொடரும் பலரும் இந்துத்துவ சிந்தனையாளர்கள் என்பதால் ‘அடுத்து தி.க.வீரமணிக்கும் வாழ்த்து சொல்வீர்களோ?’ என நெகட்டிவ் விமர்சனங்களை அடுக்கி வருகின்றனர்.

பாஜக தீவிர இந்துத்துவ அரசியலை முன்னெடுத்துவரும் நிலையில் பால் தினகரனை தேடிப்போய் நயினார் வாழ்த்துச் சொல்லியிருப்பது அரசியல் அரங்கில் கவனம் பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in