`முடிந்தால் தூக்குங்கள்'- திமுக எம்பிக்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் சவால்

`முடிந்தால் தூக்குங்கள்'- திமுக எம்பிக்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் சவால்

``எங்கள் தலைமை இசைவு தெரிவித்தால் பாஜக எம்எல்ஏக்கள் இரண்டு பேரை தூக்கிவிடுவோம்" என்று திமுக எம்பி கூறியிருந்த நிலையில், அவருக்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் சவால் விடுத்துள்ளார்.

திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா நேற்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் தன்னை அக்கட்சியில் இணைத்துக்கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சூர்யா சிவா, திமுகவில் அங்கீகரிக்கப்படவில்லை என வருத்தம் உள்ளது. குடும்ப ரீதியிலான சில பிரச்சினைகளும் உள்ளன. உழைப்புக்கு அங்கீகாரம் கொடுக்கும் இடத்தில் இணையவேண்டும் என்பதால் பாஜகவில் இணைந்தேன்" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் தருமபுரி திமுக எம்பி செந்தில்குமார் இன்று காலை பரபரப்பு ட்வீட் ஒன்றை போட்டிருந்தார். அதில், "திமுகவில் எந்த பதவியிலும் இல்லாத ஒருவர் உங்கள் கட்சியில் இணைவதை கொண்டாடும் தமிழக பாஜக உங்களுக்கு ஒரு தகவல். உங்க கட்சியின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் உள்ளார்கள். எங்கள் தலைமை இசைவு தெரிவித்தால் இரண்டு பேரையும் தூக்கிவிடுவோம்" என்று கூறியிருந்தார்.

இந்த ட்வீட் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், திமுக எம்பி செந்தில் குமாருக்கு சவால் விடுத்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில், "முடிந்தால் தூக்குங்கள்.. பார்க்கிறோம்…" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.