மருத்துவமனையில் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் திடீர் அனுமதி!

 வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, அவர் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன், கடந்த வாரம் ஹைதராபாத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்றுவிட்டு, கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவை திரும்பினார்.

அப்போது அவருக்கு லேசான காய்ச்சல் இருந்ததால், பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றிருந்தார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

 வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in