உ.பி. சட்டசபைக்குள் குட்காவை அசால்ட்டாக சாப்பிடும் பாஜக எம்எல்ஏ: அதிர்ச்சி வீடியோ

உ.பி. சட்டசபைக்குள் குட்காவை அசால்ட்டாக சாப்பிடும் பாஜக எம்எல்ஏ: அதிர்ச்சி வீடியோ

உத்தரபிரதேச சட்டப்பேரவைக்குள் பாஜக எம்எல்ஏ ஒருவர் குட்காவை சாப்பிடும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்மை காலமாக இந்தியாவுக்கு வெளிநாடுகளில் இருந்து போதைப் பொருட்கள் அதிக அளவில் கடத்தப்பட்டு வருகின்றன. அரசியல்வாதிகளின் உடந்தையுடன் இந்த கடத்தல் சம்பவம் நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி போதைப்பொருட்கள், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை தற்போது அரசியல்வாதிகள் பயன்படுத்தி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் தற்போது சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்திற்கு வரும் எம்எல்ஏக்களை யாரும் சோதனையிடுவது கிடையாது. அந்த வகையில் எந்த பொருட்கள் வேண்டுமென்றாலும் அவர்கள் கொண்டு செல்லலாம் என்ற நிலை இருக்கிறது. இந்நிலையில், பாஜக எம்எல்ஏ ஒருவர் சட்டப்பேரவையில் கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது புகையிலை பொருட்களை தான் இருக்கும் இருக்கையில் இருந்து எடுத்து சாப்பிடுகிறார். இவரின் இந்த செயலை சட்டப்பேரவைக்குள்ளேயே ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் சமூக ஊடக ஒருங்கிணைப்பாளர் சதீஷ்ரெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in