நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்து: தெலங்கானா பாஜக எம்எல்ஏ அதிரடி கைது!

நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்து: தெலங்கானா பாஜக எம்எல்ஏ அதிரடி கைது!

முகமது நபிகள் குறித்து அவதூறு கருத்துக்களை பேசிய தெலங்கானா பாஜக எம்எல்ஏ ராஜா சிங் இன்று கைது செய்யப்பட்டார்.

நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்தற்கு எதிராக, தெலங்கானா பாஜக எம்எல்ஏ ராஜா சிங் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஹைதராபாத்தில் நேற்று இரவு பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

மத நம்பிக்கைகளை இழிவுபடுத்துவது தொடர்பான சட்டப் பிரிவுகளின் கீழ் ராஜா சிங் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஹைதராபாத் தெற்கு மண்டல காவல்துறை துணை ஆணையர் சாய் சைதன்யா தெரிவித்தார்.

முகமது நபியைப் பற்றி இழிவான கருத்துக்கள் இடம்பெற்றதாகக் கூறப்படும் வீடியோவை ராஜா சிங் வெளியிட்டதைத் தொடர்ந்து, நேற்று இரவு ஹைதராபாத் காவல்துறை ஆணையர் அலுவலகம் மற்றும் நகரின் பிற பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தன. ராஜா சிங் இஸ்லாமிய சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்தியதாகவும், அவரை உடனடியாக கைது செய்யுமாறும் வலியுறுத்தி போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர்.

கோஷாமஹால் தொகுதி எம்எல்ஏவான ராஜா சிங், கடந்த வாரம் நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றுக்கு இடையூறு செய்ய முயன்றார். வெள்ளி கிழமையன்று அவர் ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நடிகர் முனாவர் ஃபரூக்கியின் நிகழ்ச்சியை ரத்து செய்ய சுமார் 50 ஆதரவாளர்களுடன் சென்றபோது காவல்துறையினர் அவரை கைது செய்து தடுப்புக் காவலில் வைத்தனர். அதன்பின்னர் நிகழ்ச்சி அமைதியாக நடந்து முடிந்தது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in