காவல்நிலையத்தை முற்றுகையிட பாஜகவினர் முயற்சி: போலீஸார் அதிரடி நடவடிக்கை

காவல்நிலையத்தை முற்றுகையிட பாஜகவினர்  முயற்சி: போலீஸார் அதிரடி நடவடிக்கை

வள்ளியூரில் காவல்நிலையத்தை முற்றுகையிட முயன்ற பாஜகவினரை போலீஸார் கைது செய்தனர்.

வள்ளியூர் பேரூராட்சிக்குட்பட்ட அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் பாஜக கொடிக்கம்பம் இருதினங்களுக்கு முன்பு நடப்பட்டது. இந்தக் கொடிக் கம்பத்தை வள்ளியூர் போலீஸார் அகற்றியுள்ளனர். இதைக் கண்டித்து பாஜகவினர், காவல் நிலையத்தை முற்றுகையிட வந்தனர். போலீஸார் அவர்களைத் தடுத்ததும் வள்ளியூரில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் மாவட்டத் தலைவர் தயாசங்கர் தலைமையில் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். வள்ளியூர் போலீஸார் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி எஸ்.பி சரவணன் அதிரடிப்படையினருடன் போராட்டம் நடந்த இடத்திற்கு வந்தார். மாவட்டத் தலைவர் தயா சங்கர் உள்பட 200-க்கும் அதிகமான பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அருகிலுள்ள கல்யாண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். வள்ளியூரில் கைது செய்யப்பட்ட பாஜகவினரை, நாகர்கோவில் எம்எல்ஏ எம்.ஆர்.காந்தி நேரில் சந்தித்துப் பேசினார். பாஜகவினர் கைது செய்யப்பட்டதால் வள்ளியூரில் பரபரப்பு ஏற்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in